வங்கக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்தம்: தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு..!!

9 July 2021, 1:06 pm
thenmerku rain - updatenews360
Quick Share

சென்னை: வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை மறுநாள் உருவாவதால் தமிழ்நாட்டின் ஒரு சில பகுதிகளில் மிக கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் விட்டு விட்டு மழை கொட்டித் தீர்த்தது. பலத்த காற்றுடன் பெய்த மழையால் கிரீம்ஸ் சாலையில் சென்ற ஆட்டோ மற்றும் ஆம்புலன்ஸ் மீது மரம் விழுந்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தொடர்ந்து மரம் அப்புறப்படுத்தப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம், வாலாஜாபாத், சின்னையன் சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் 1 மணி நேரத்திற்கும் மேலாக வெளுத்து வாங்கிய கனமழையால் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

chennai metrology - updatenews360

தேனி, திண்டுக்கல், திருவள்ளூர், செஞ்சி, போடி, மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு சுமார் ஒருமணி நேரம் கனமழை பெய்தது. மதுரை மாவட்டத்தில் காலவாசல், பைபாஸ் ரோடு, ஆரப்பாளையம், சிம்மக்கல், கோரிப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புதூர் பகுதியில் கனமழை பெய்தது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி சுற்றுவட்டார பகுதிகள் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் சுற்றுவட்டார பகுதிகளில் பல மணி நேரம் கனமழை கொட்டித்தீர்த்தது. திருவள்ளூர், விழுப்புரம், கரூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது. விருதுநகர் மாவட்டம் திருச்சுழி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளும் கனமழை பெய்தது.

இந்நிலையில் வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை மறுநாள் உருவாகிறது; இதனால் தமிழ்நாட்டின் ஒரு சில பகுதிகளில் மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது. தெற்கு ஒடிசா வடக்கு ஆந்திர பகுதிகளில் உருவாகும் தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

Views: - 122

0

0