பிறந்து 24 மணி நேரத்திற்குள் சடலமாக தண்ணீரில் மிதந்த ஆண் குழந்தை

21 November 2020, 10:11 pm
Quick Share

கன்னியாகுமரி: குமரி மாவட்டம் இறச்சகுளம் பகுதியில் இன்று பிறந்த ஆண் குழந்தையின் சடலமொன்று சாக்கடை ஒடையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை தாலுகாவில் உட்பட்ட இறச்சகுளம் பகுதியில் இருந்து தாழாக்குடி செல்லும் சாலையில் சாக்கடை ஓடையில் ஆண் குழந்தையின் சடலம் கிடப்பதாக அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் கொடுத்த தகவலின் பேரில் பொதுமக்கள் அங்கு சென்று பார்த்த போது இறந்த நிலையில் ஆண் குழந்தை ஒன்று துணியில் சுற்றப்பட்ட நிலையில் கிடந்தது கண்டெடுக்கப்பட்டது.

இன்று பிறந்த அந்த குழந்தையை யாரோ புதர்களுக்கு இடையே போட்டுவிட்டுச் சென்றது தெரியவந்துள்ளது. முறைதவறி பிறந்த இந்த குழந்தையை யாராவது கொலை செய்து போட்டிருக்கலாம் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இது குறித்து பூதப்பாண்டி போலீசார் சம்பவ இடத்தில் சோதனை செய்து குழந்தையின் தாய் யார்,குழந்தையின் கொலையின் பின்னணி என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர் .இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.