பேரூர் பட்டீஸ்வரர் கோவிலுக்கு ரூ.46 லட்சம் மதிப்பில் புதிய கட்டடம் : அமைச்சர் எஸ்.பி வேலுமணி திறந்து வைத்தார்!!

By: Udayachandran
1 October 2020, 6:03 pm
SP Velumani 1 - updatenews360
Quick Share

கோவை : ரூ.46 லட்சம் மதிப்புள்ள புதிய கட்டிடங்களை அமைச்சர் எஸ் பி வேலுமணி திறந்து வைத்தார்.

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான வெள்ளிக்கிழமை அம்மன் தோப்பு பகுதிகளில் புதிதாக ஆண்கள் பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு புதியதாக கட்டப்பட்ட கழிவறை மற்றும் குளியலறைகளை திருக்கோயில் நிதியிலிருந்து ரூபாய் 46 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டது.

அதனை உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி மக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைத்தார். மேலும் அதே பகுதியில் தர்ப்பணம் செய்யும் மண்டபம் கட்டப்பட்டு வருகிறது. அதனை ஆய்வு செய்த அமைச்சர், விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

பின்னர் அந்த பகுதியில் உள்ள பொது மக்களிடம் பேசும் போது சளி, காய்ச்சல் இருந்தால் உடனடியாக அரசு மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும், குழந்தைகள் பெரியவர்கள் தேவையில்லாமல் வெளியே செல்ல வேண்டாம், மருத்துவர்கள் ஆலோசனைப்படி மருந்துகளை உட்கொள்ள வேண்டும், கண்டிப்பாக பொதுமக்கள் சமூக இடைவெளி விட்டு நிற்க வேண்டும், முக கவசம் அணியாமல் வெளியே செல்ல கூடாது என அறிவுரை வழங்கினார்.

Views: - 47

0

0