புதுச்சேரியில் 50 நாட்களாக நிலவி வந்த இழுபறிக்கு முற்றுப்புள்ளி : நாளை புதிய அமைச்சரவை பதவியேற்க வாய்ப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
23 June 2021, 1:20 pm
Pondy Cabine Minister List- Updatenews360
Quick Share

புதுச்சேரி : தேர்தல் முடிவு வெளியாகி 50 நாட்களுக்கு பிறகு அமைச்சரவை பட்டியலை துணைநிலை ஆளுநர் தமிழிசையிடம் இன்று வழங்கினார் முதல்வர் ரங்கசாமி. இதனையடுத்து நாளை அமைச்சரவை பதவியேற்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

புதுச்சேரியில் நடைபெற்று முடிந்த 15வது சட்டபேரவைக்கான தேர்தலில் பாஜக, என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணியான தேசிய ஜனநாயக கூட்டணி 16 இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது.

இதனையடுத்து முதலைச்சராக மே 7ம் தேதி என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி பதவியேற்றுக்கொண்டார். இதனையடுத்து அமைச்சரவை பங்கீட்டில் பாஜக – என்.ஆர்.காங்கிரஸ் இடையே ஏற்பட்டு வந்த இழுபறி காரணமாக தேர்தல் முடிவு வெளியாகி 50 நாட்களுக்கு மேல் ஆகியும் அமைச்சரவை பதவியேற்காத நிலை உருவானது.

இதனையடுத்து இரு கட்சிக்கும் இடையே அமைச்சரவை பங்கீடு மற்றும் இலாக ஒதுக்குவதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து இன்று காலை துணைநிலை ஆளுநர் தமிழிசையை நேரில் சந்தித்து அமைச்சரவை குறித்த பட்டியலை அளித்தார்.

இதனால் கடந்த 50 நாட்களுக்கு மேல் நீடித்து வந்த இழுபறி முடிவுக்கு வந்தது. தற்போது துணைநிலை ஆளுநரிடம் வழங்கியுள்ள பட்டியலில் பாஜகவிற்கு 2 அமைச்சர்களும் என்.ஆர்காங்கிரசுக்கு 3 அமைச்சர்கள் வழங்க முதல்வர் ஒப்புதல் அளித்துள்ளார். இதனையடுத்து நாளைய தினம் அமைச்சர்கள் பதவியேற்பு விழா நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது…

Views: - 594

0

0