ஆவடி, தாம்பரம் மாநகராட்சிகளுக்கு புதிய காவல் ஆணையர்கள் நியமனம் : தமிழக அரசு அறிவிப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
1 October 2021, 3:35 pm
Commissioner -Updatenews360
Quick Share

சென்னை : ஆவடி, தாம்பரம் மாநகராட்சிகளுக்கு புதிய காவல்துறை ஆணையர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

புதிதாக உருவாக்கப்பட்ட தாம்பரம், ஆவடி காவல் ஆணையரகத்திற்கு சிறப்பு அதிகாரிகளை தமிழக அரசு நியமித்துள்ளது.

அதன்படி, தாம்பரம் மாநகர காவல் ஆணையரகத்துக்கு சிறப்பு அதிகாரியாக எம்.ரவி நியமிக்கப்பட்டுள்ளார். ஆவடி மாநகர காவல் ஆணையரகத்துக்கு சிறப்பு அதிகாரியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமிக்கப்பட்டுள்ளார்.

திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு ஆவடி, தாம்பரம் மாநகராட்சியாக தரம் உயர்ந்த நிலையில், மாநகர காவல் ஆணையராக சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 403

0

0