இந்துக் கோவில்கள் மற்றும் நாகூர் தர்காவில் புதிய கட்டிடப்பணிகள் : முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல்!!

5 February 2021, 4:44 pm
Temple CM- Updatenews360
Quick Share

சென்னை : இந்து அறநிலையத்துறை சார்பாக மயிலாடுதுறையில் உள்ள கோவிலில் தங்கும் விடுதி மற்றும் நாகூர் தர்காவிற்கு சுற்றுச்சுவர் கட்டும் பணியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்.

தமிழ்‌ பண்பாட்டின்‌ பெட்டகமாகவும்‌, ஆன்மீகத்தின்‌ இருப்பிடமாகவும்‌, கலைத்திறனின்‌ நிலைக்களமாகவும்‌ விளங்குகின்ற திருக்கோயில்களின்‌ சொத்துக்களை பாதுகாத்து பராமரிப்பது, அன்றாடப்‌ பூலைகள்‌ தங்குதடையின்றி நடப்பதை உறுதி செய்வது, பக்தர்களுக்குத்‌ தேவையான வசதிகளை செய்து கொடுப்பது போன்ற பணிகளை, தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்‌ துறை மூலமாக செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில்‌, இந்து சமய அறநிலையத்‌ துறை சார்பில்‌ மயிலாடுதுறை மாவட்டம்‌, சீர்காழி வட்டம்‌, நாங்கூர்‌, அருள்மிகு நாராயணப்பெருமாள்‌ திருக்கோயிலுக்குச்‌ சொந்தமான இடத்தில்‌ 3,565 சதுர அடி பரப்பளவில்‌, 60 லட்சம்‌ ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ கட்டப்பட்டுள்ள சேவார்த்திகள்‌ தங்கும்‌ விடுதியும், சென்னை மாவட்டம்‌, கே.கே.நகர்‌, அருள்மிகு சக்தி விநாயகர்‌ திருக்கோயிலுக்கு சொந்தமான இடத்தில்‌ 6,800 சதுர அடி பரப்பளவில்‌ 52 லட்சத்து 30 ஆயிரம்‌ ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ புதுப்பிக்கப்பட்ட திருமண மண்டபம்‌ என மொத்தம்‌ 1 கோடியே 12 லட்சத்து 30 ஆயிரம்‌ ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ கட்டப்பட்டுள்ள இந்து சமய அறநிலையத்‌ துறை கட்டடங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

மேலும்‌, கடலூர்‌ மாவட்டம்‌, சிதம்பரம்‌ நகர்‌, அருள்மிகு இளமையாக்கினார்‌ திருக்கோயிலின்‌ திருக்குளத்திற்கு 2 கோடியே 60 லட்சம்‌ ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ கட்டப்படவுள்ள மதிற்சுவருக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்கள்‌ அடிக்கல்‌ நாட்டினார்.

இதே போல நாகப்பட்டினம்‌ மாவட்டத்தில்‌ சுமார்‌ 400 ஆண்டுகள்‌ பழமை வாய்ந்த நாகூர் தர்காவில் கிழக்கு பகுதியில்‌ தாகாவிற்கு சொந்தமான இடத்தில்‌ சுமார்‌ 1 ஏக்கர்‌ பரப்பளவில்‌ உள்ள குளமானது சுமார்‌ 200 ஆண்டுகளுக்கு முன்னர்‌ கட்டப்பட்டது. இக்குளம்‌ யாத்திரிகர்கள்‌ நீராடும்‌ வகையில்‌ அமைக்கப்பட்டுள்ளது.
இக்குளக்கரையினை சுற்றி நான்குபுறங்களிலும்‌ உயாந்த குடியிருப்பு மாடிக்‌கட்டடங்கள்‌, வியாபாரத்‌ தலங்கள்‌, வழிபாட்டு கூடங்களுடன்‌ மக்கள்‌ அதிகமாக வசித்து வருகின்றனர்‌.

4 கோடியே 34 லட்சம்‌ ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ நாகூர்‌ தாகா குளத்தின்‌ நான்குபுறத்‌ தடுப்புச்‌ சுவர்‌ புதுப்பித்துக்‌ கட்டும்‌ பணிக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்கள்‌ அடிக்கல்‌ நாட்டினார். இந்த நிகழ்ச்சியில்‌, அமைச்சர்கள் ஓ.எஸ்‌.மணியன்‌, நிலோபர்‌ கபில்‌, வளாமதி, தலைமைச்‌ செயலாளர்‌ முனைவர்‌ ராஜீவ்‌
ரஞ்சன்‌ உட்பட ‌ அரசு உயர்‌ அலுவலாகள்‌ கலந்து கொண்டனர்‌.

Views: - 0

0

0