குமரி மாவட்டத்தில் ஆடி அமாவாசை முன்னிட்டு புதிய கட்டுப்பாடு : பாஜக எம்எல்ஏ எம்.ஆர். காந்தி கடும் எதிர்ப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
7 August 2021, 3:32 pm
Kumari Gandhi- Updatenews360
Quick Share

கன்னியாகுமரி : ஆடி அமாவாசை தினத்தில் குமரி மாவட்ட கடற்கரை மற்றும் நீர்நிலைகளில் தங்கள் முன்னோர்களை நினைத்து புனித நீராடி தர்ப்பணம் செய்ய அனுமதி வழங்கக்கோரி பா.ஜ.க எம்எல்ஏ எம்.ஆர்.காந்தி நாகர்கோவிலில் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தார்.

இந்துக்களின் புண்ணிய தினங்களில் தை அமாவாசை ஆடி அமாவாசையும் முக்கியமான நாட்கள் ஆகும். இந்த நாட்களில் இந்துக்கள் அதிகாலையில எழுந்து கடல் நதி, ஆறு போன்ற புண்ணிய தீர்த்தங்களில் புனித நீராடி தங்களது முன்னோர்களை நினைத்து பலிகர்ம பூஜை செய்து தர்ப்பணம் கொடுப்பது வழக்கம் .

கொரோனா மூன்றாம் அலை தொடங்கும் நிலை இருப்பதால் முன்னெச்சரிக்கையாக முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரி கடற்கரையில் ஆண்டுதோறும் ஆடி அமாவாசை என்று லட்சக்கணக்கான மக்கள் தங்கள் மறைந்த முன்னோர்களை நினைத்து அரிசி, தர்ப்பை, புற்கள் போன்ற பொருட்கள் உடன் வேத விற்பன்னர்கள் மூலம் மந்திரங்கள் சொல்லி பலிகர்ம பூஜை ஈடுபடுவது வழக்கம்.

இந்த ஆண்டு கொரோனா 3வது அலையின் தாக்கத்தால் கடலில் புனித நீராட பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி கடற்கரைக்கு செல்லும் அனைத்து சாலைகளும் பேரிகார்டுகள் மூலம் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு போலீஸ் கண்காணிப்பு பணிகள் தொடங்கியது.

இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் எம்.ஆர்.காந்தி நாகர்கோவிலில் குமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்திடம் மனு அளித்தார்.

அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது, முந்தைய வருடங்களில் நடை பெற்றது போல் இந்த வருடமும் ஆகஸ்ட் 8 ஆம் தேதியான நாளை நீர்நிலைகளில் மக்கள் புனிதநீராடி தர்ப்பணம் செய்யும் நிகழ்ச்சிக்கு தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் அனுமதி அளித்திட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Views: - 754

0

0