தமிழகத்தில் புதிய மாநகராட்சிகள்…அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

21 July 2021, 9:59 pm
Minister Nehru- Updatenews360
Quick Share

சென்னை: தமிழகத்தில் புதிய மாநகராட்சிகள், நகராட்சிகள் விரைவில் உருவாக்கப்படும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

சென்னையில் புதிய குடிநீர் திட்டங்கள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு பின் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில், “பொது இடங்களை சிறப்பான முறையில் பராமரிப்பதே சிங்கார சென்னை திட்டத்தின் நோக்கம். சிங்கார சென்னை திட்டம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் அறிவிப்பார் பொது இடங்களை நல்ல முறையில் பராமரிப்பதே சிங்கார சென்னையின் நோக்கம்.

தமிழகத்தில் புதிய மாநகராட்சிகள், நகராட்சிகள் விரைவில் உருவாக்கப்படும். நகராட்சி நிர்வாகப் பணிகளுக்கான டெண்டர்களில் தவறு நடப்பது கண்டுபிடிக்கப்பட்டால் நடவடிக்கை.மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் ரூ.2,500 கோடியில் புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும். சென்னையில் மழைநீர்ந தேங்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். கழிவுநீர் நதிகளில் கலப்பதை தடுக்க நடவடிக்கை. ஏரி, குளங்கள் தூர்வாரப்படும். நகர்புறங்களில் சாலை அமைக்கும் போது நிலத்தடி நீர் சேமிப்பு பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.” எனக் கூறினார்.

Views: - 49

0

0