புதிய கல்விக்கொள்கை : உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் அபூர்வா தலைமையில் குழு

4 September 2020, 9:54 am
New Committee - Updatenews360
Quick Share

சென்னை : புதிய கல்விக்கொள்கை குறித்த பரிந்துரை மற்றும் கருத்துகளையும் தமிழக அரசுக்கு வழங்க உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் அபூர்வா தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் புதிய தேசிய கல்விக்கொள்கையை வெளியிட்டது. அந்த கல்விக்கொள்கையில் பல்வேறு மாற்றங்கள், நடைமுறைகள் இடம்பெற்றிருந்தது.

இந்த நிலையில் மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழக அரசு, இரு மொழிக் கொள்கை தொடர்ந்து பின்பற்றப்படும் என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார். அதே போல புதிய கல்விக்கொள்கை குறித்து பரிந்துரைகளை தெரிவிக்க குழு அமைக்கப்படும் என கூறினார்.

அதன்படி, தேசிய கல்லிக்கொள்கையில் உயர்கல்வியில் தமிழக அரசால் ஏற்றுக்கொள்ளக்கூடிய கருத்துகளை பரிந்துரைகளை வழங்க உயர்மட்டக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அரசாணையை உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் அபூர்வா வெளியிட்டுள்ளார்.

அதில், புதிய கல்விக்கொள்கையில் இருந்து தமிழக அரசால் ஏற்றுக் கொள்ளக்கூடிய கருத்துகளையும், பரிந்துரைகளையும் அரசுக்கு வழங்க உயர் கல்வித்துறை முதன்மை செயலாளர் அபூர்வா தலைமையில் உயர் மட்டக் குழு அமைக்கப்படுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதே போல, சென்னை பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர்கள் எஸ்.பி தியாகராஜன், பி.துரைசாமி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் கே. பிச்சுமணி, அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் என், ராஜேந்திரன், மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.கிருஷ்ணன், திருவள்ளுவர் பல்கலைக்கழக துணை வேந்தர் எஸ். தாமரைச்செல்வி ஆகியோர் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 0

0

0