10ம் தேதி புதிய திரைப்படங்களை வெளியிட வேண்டும் : அமைச்சர் கடம்பூர்.செ.ராஜு வேண்டுகோள்!!

5 November 2020, 6:14 pm
Kadamboor Raju - Updatenews360
Quick Share

தூத்துக்குடி : 10ந்தேதி புதிய திரைப்படங்களை வெளியிட வேண்டும் என்றும் கட்டுப்பாடு விதிக்க வேண்டாம் என்று தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள சிந்தலக்கரையில் ஜெ.ஜெ.எம். திட்டத்தின் கீழ் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் பணிகளை தொடக்க விழா நடைபெற்றது. இதில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து புதூர் ஆரம்ப சுகாதார நிலைய புதிய கட்டிடத்தினையும் அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் விளாத்திகுளம் எம்.எல்.ஏ.சின்னப்பன், மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதன் பின்னர் அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ செய்தியாளர்களிடம் பேசுகையில் கொரோனா ஊரடங்கு காலத்திலும் திரைத்துறை இயங்க தமிழக முதல்வர் பல்வேறு தளர்வுகளை வழங்கினார். திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கையை ஏற்று 10ந்தேதி திரையரங்குகளை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. திரையரங்கு உரிமையாளர்களும் தயாராகி வருகின்றனர். அரசும் வழிகாட்டும் நெறிமுறைகளை வழங்கியுள்ளது.

இந்தநிலையில் நடப்பு தயாரிப்பாளர் சங்க தலைவர் பாரதிராஜா விபிஎப் கட்டணத்தினை இனி திரையரங்கு உரிமையாளர்கள் தான் ஏற்க வேண்டும் என்று அதுவரை புதிய திரைப்படங்கள் வெளியிடப்படாது என்று கூறியுள்ளார்.

இன்னும் திரையரங்கு திறக்க 5 நாள்கள் உள்ளதால் ஒரு பிரச்சினை வந்தால் உடனடியாக பேசி சுமூக தீர்வு காண்பது இயலாத காரியம் என்றும், தமிழ் திரைப்படத்துறைக்கு வழிகாட்டியாக இருக்க கூடிய இயக்குநர் இமயம் பாரதிராஜா மற்றும் அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் வேண்டுகோளாக வைப்பது 10ந்தேதி திரைப்படங்களை வெளியிடும் போது கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டாம் என்றும், தற்பொழுது புதிய படங்களை வெளியீட்டு விட்டு அதன் பிறகு பேசி தீர்வு காண்பது சரியாக இருக்கும் என்பது எங்கள் கருத்து என்றார்.

Views: - 31

0

0