கோவை அவினாசி சாலையில் விரைவில் உப்பிலிபாளையம் – கோல்டுவின்ஸ் வரை புதிய மேம்பாலம் : ஆய்வுப் பணிகள் துவக்கம்!!
21 November 2020, 12:48 pmகோவை : கோவை அவினாசி சாலையில் உப்பிலிபாளையம் – கோல்டுவின்ஸ் வரை அமையவுள்ள புதிய மேம்பாலத்திற்கான பணிகள் துவங்கியது.
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு கோவை அவினாசி சாலை உப்பிலிப்பாளையத்தில் இருந்து கோல்டு விங்க்ஸ் வரை சுமார் 9 கிமீ க்கு உயர்மட்ட மேம்பாலம் அமைக்க சாலையின் தரம் குறித்து ஆய்வு செய்து மேம்பாலம் அமைக்க உத்தரவிடப்பட்டது.
அதனை தொடந்து இன்று தமிழகத்திற்கு வருகை தரவுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழக முதல்வருடன் இணைந்து தமிழகத்தில் வர இருக்கின்ற பொதுபணிகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மேம்பால பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவை துவக்க இருப்பதாகவும் கூறபடுகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை அவினாசி சாலையில் வரவுள்ள உப்பிலிப்பாளையம்-கோல்டுவிங்க்ஸ் மேம்பால பணிகளின் ஆய்வுகள் துவங்கியுள்ளன.
0
0