புதிய மதுரை ஆதீனம் பதவியேற்பு : 293வது மடாதிபதியாக ஹரிஹர ஞானசம்பந்த தேசிகர் பொறுப்பேற்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
23 August 2021, 12:53 pm
Madurai Aadheenam - Updatenews360
Quick Share

மதுரை : 292-ஆவது ஆதீனமாக இருந்த அருணகிரிநாதர் மறைவை அடுத்து, புதிய ஆதினம் பதவியேற்றுக்கொண்டார்.

மதுரை ஆதின மடத்தின் 293-ஆவது புதிய ஆதீனமாக (மடாதிபதி) ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் பொறுப்பேற்றுக்கொண்டார். தமிழகத்தில் உள்ள அனைத்து தருமபுரம் ஆதினங்களும் மற்றும் முக்கிய பிரமுகர்கள் புதிய ஆதீனம் பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். 292-ஆவது ஆதீனமாக இருந்த அருணகிரிநாதர் மறைவை அடுத்து, புதிய ஆதினம் பதவியேற்றுக்கொண்டார்.

இன்று மதியம் மகேஸ்வர பூஜையும், இரவில் பட்டின பிரவேசமும், கொல்லுக்காட்சியும் நடக்க உள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டு, இளைய சன்னிதானமாக ஹரிஹர தேசிக பரமாச்சாரிய சுவாமிகளை, அருணகிரிநாதர் நியமித்தார்.

மேலும், இளைய ஆதினம் சுந்தரமூர்த்தி தம்பிரான், மதுரை ஆதீனத்தின் 293-ஆவது ஆதீனமாக தேசிக பரமாச்சாரிய சுவாமிக்கு பட்டம் சூட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 447

0

0