டிஎன்பிஎஸ்க்கு புதிய உறுப்பினர்களை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு

13 July 2021, 7:36 pm
TNPSC - Updatenews360
Quick Share

சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு 4 உறுப்பினர்களை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

குரூப் தேர்வுகளை நடத்தி அரசு காலிப் பணியிடங்களுக்கான நியமனங்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் பூர்த்தி செய்து வருகிறது. இந்த நிலையில், டி.என்.பி.எஸ்.சி.க்கு புதிய உறுப்பினர்களை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவுட்டுள்ளது.

அதன்படி, புதிய உறுப்பினர்களாக ஐஏஎஸ் அதிகாரி முனியநாதன், பேராசிரியர் ஜோதி சிவஞானம், முனைவர் அருள்நிதி, ராஜ் மரிய சூசை ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Views: - 91

0

0