புது போஸ்டர்…புது டீசர்: தொடங்கியது கமல்ஹாசன் பிறந்தநாள் கொண்டாட்டம்..!!

Author: Aarthi Sivakumar
6 November 2021, 4:13 pm
Quick Share

ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் விக்ரம் படத்தின் போஸ்டர் ஒன்று கமலின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிட்டு பிறந்தநாள் கொண்டாட்டத்தை தொடங்கியுள்ளது.

தமிழகத்தில் ஸ்டார் நடிகர்களின் பிறந்தநாளை ரசிகர்கள் ஆரவாரமாக கொண்டாடுவது வழக்கம். தற்போது புதிய நடைமுறையாக பிரபலங்களின் பிறந்தநாள் அன்று அவர்கள் நடித்த படங்களின் அப்டேட் வெளியிட்டு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Image

அந்தவகையில், கமல்ஹாசன் இந்தியன் 2, விக்ரம் என இரு படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் இந்தியன் 2 படத்தின் தற்போதைய அப்டேட் எதுவும் இல்லை. விக்ரம் கமலின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் படம். கமலின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

பின்னணியில் தீ பறக்க, கையில் ரைபிளை காதலுடன் பிடித்திருக்கிறார் கமல். கூடவே ஒரு அறிவிப்பும் லோகேஷ் கனகராஜால் வெளியிடப்பட்டது. இன்று மாலை விக்ரம் படத்தின் டீஸர் கமலின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகிறது. The First Glance into the world of VIKRAM awaits you all tomorrow at 6pm என இதனை அறிவித்துள்ளார் லோகேஷ்.

Views: - 431

1

0