தமிழகத்திற்கு புதிய கட்டுப்பாடுகள்? ஊரடங்கு விதிக்கப்பட வாய்ப்புள்ளதா? அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்!!

Author: Udayachandran RadhaKrishnan
10 July 2022, 4:02 pm
Minister Subramanian - Updatenews360
Quick Share

வரும் செப்டம்பருக்குள் மருத்துவம் மற்றும் மருத்துவ களப்பணிகளில் உள்ள 4,318 பணியிடங்கள் நிரப்பப்படும் எனவும், தமிழகத்தில் 5% தொற்று பாதிப்பு இருப்பதால், தற்போது ஊரடங்கு தேவையில்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழக முழுவதும் இன்று கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இதே போல் தஞ்சாவூர் மாவட்டத்தில் 1,458 இடங்களில் இந்த முகம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தஞ்சாவூர் முனிசிபல் காலணி பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் நடைபெறும் முகாமினை அமைச்சர் மா.சுப்பிரமணியம் ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை முதல் தவணை செலுத்தியவர்கள் 94.68% உள்ளது. இதேபோல் இரண்டாவது தவணை செலுத்தியவர்கள் 85.47% உள்ளது. தடுப்பூசி போடும் பணியினை ஒரு இயக்கமாக முன்னெடுத்ததால், தடுப்பூசி செலுத்திய சதவீதம் என்பது உயர்ந்துள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை தினசரி தொற்று என்பது சற்று உயர்ந்துள்ளதாகவும், ஆனால் கடந்த இரண்டு மாதங்களில் உயிரிழப்பு ஏதும் இல்லை என அவர் தெரிவித்தார்.

மேலும் பாதிக்கப்பட்டவர்களில் 95% பேர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களை மக்கள் நல்வாழ்வு துறைவும், உள்ளாட்சி நிர்வாகத்தினாலுமீ தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, அவர்களுக்கு தேவையான மருத்துவ வசதிகளும் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது செய்யப்படும் கொரோனா பரிசோதனையில் 5% பாதிப்பு உள்ளது. 10% அதிகரித்தால் மட்டுமே கூடுதலாக நடவடிக்கை தேவை என அரசு உத்திடப்பட்டுள்ளது. அதேபோல் பாதிப்பு உள்ள மாவட்டங்களில் 40% அதிகரித்து, மருத்துவமனைகளில்அனுமதிக்கப்பட்டால் மட்டுமே ஊரடங்கு போன்ற நடவடிக்கை மேற்கொள்ளலாம்.

ஆனால் தற்போது தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக 5% மட்டுமே அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் !சிகிச்சை பெற்று வாருகின்றனர். எனவே தற்போது ஊரடங்கு என்பது தேவையில்லை.

செவிலியர்கள் மற்றும் மருத்துவம் சார்ந்த களப்பணியாளர்கள் 4,318 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணியிடங்களுக்களை நிரப்புவதற்கு எம்ஆர்பிக்கு அனுமதி தந்துள்ளோம். எம்ஆர்பி மூலம் அந்த பணிகளுக்கான சான்றிதழ்களை சரி பார்க்கும் பணி என்பது நடைபெற்று வருகிறது. எனவே செப்டம்பர் இறுதிக்குள் 4,318 பணிகளும் நிரப்பப்படும் என அவர் தெரிவித்தார்.

Views: - 247

0

0