“மொய் பணமா அதெல்லாம் பழைய பேஷன்“ : புது டிரெண்டுக்கு மாறிய புதுமண ஜோடி!!

17 January 2021, 4:43 pm
Google Pay - Updatenews360
Quick Share

மதுரை : கல்யாணத்துக்கு வந்துட்டு இனிமே மொய் வைப்பதற்கு பதிலாக டிஜிட்டல் பண முறையாக கூகுள் பே, போன்-பே போன்ற செயலி மூலம் வசூல் செய்யப்பட்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருமணங்களுக்கு செல்கின்ற உறவினர்கள், நண்பர்கள் இனிமேல் மொய் செய்யாமல் அங்கிருந்து வர முடியாது என்ற அளவிற்கு மிக நவீனமாக கூகுள் பே, போன் பே போன்றவற்றின் மூலமாக வசூல் செய்யும் நடைமுறை தொடங்கியுள்ளது.

இன்று மதுரையில் நடைபெற்ற திருமண நிகழ்வு ஒன்றில், மொய் செய்கின்ற இடத்தில் google pay மற்றும் Phone pe ஆகியவற்றின் பார்கோட் வைக்கப்பட்டு வசூல் நடைபெற்றது.

புதுமையான இந்த முறையின் மூலம் திருமணத்திற்கு வருகின்ற நண்பர்கள் உறவினர்கள் ஆன்லைனில் தங்களது மொய்ப் பணத்தை செலுத்தினர்.

டிஜிட்டல் இந்தியாவின் நவீன வளர்ச்சி திருமண நிகழ்வுகளில் மொய் வசூலை கூட விட்டுவைக்கவில்லை என்பது வியப்புக்குரியது தான். இனிமேல் திருமணத்திற்கு செல்பவர்கள் மொய் வைக்காமல் வர முடியாது என்பது போல இந்த சம்பவம் அமைந்துள்ளது.

Views: - 3

0

0