அடுத்தடுத்து வெளியாகவுள்ள தமிழ் முன்னணி நடிகர்களின் படங்கள்.. ரேஸில் முந்த போவது யார்.?

Author: Rajesh
10 June 2022, 7:23 pm
Quick Share

கொரோனா காலகட்டத்திற்கு பிறகு மீண்டும் திரையரங்குகளில் திரைப்படம் பார்க்கம் பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகிறன்றனர். அந்த வகையில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான திரைப்படங்கள், திரையுலகில் பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. குறிப்பாக வேறு மொழி படங்களும் தமிழக ரசிகர்களை கவர்ந்தது, அதில் குறிப்பிடத்தக்கதாக இருந்தது கே.ஜி.எப்.2. வேறு மொழி படத்தின் வசூல் சாதனை தமிழ் படம் முறியடிக்காத என்ற தமிழ் ரசிகர்களின் ஆதங்கத்தை சமீபத்தில் வெளியான விக்ரம் நிறைவேற்றி வருவதாகவே தெரிகிறது. அந்த வகையில் அந்த திரைப்படம் உலகளவில் பாக்ஸ் ஆபிசில் சாதனை படைத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், விக்ரம் படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து ரசிகர்களின் எதிர்பார்ப்பில் தமிழ் முன்னணி நட்சத்திரங்களின் திரைப்படங்கள் வெளியாக காத்திருக்கிறது.
அதன்படி, வருகிற ஜூலை 18ஆம் தேதி தனுஷ் நடித்துள்ள திருச்சிற்றம்பலம் திரைப்படம் திரைக்கு வருகிறது. இதனை தொடர்ந்து, ஆகஸ்ட் 11ஆம் தேதி விக்ரமின் கோப்ரா மற்றும் ஆகஸ்ட் 18ஆம் தேதி சிம்புவுடன் வெந்து தணிந்தது காடு வெளியாகவுள்ளதாக தகவல்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது.

இதில் வெந்து தணிந்தது காடு இந்த தேதியில் வெளியிட படக்குழு இதுவரை உறுதிசெய்யவில்லை. டாக்டர், டான் திரைப்படங்களின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் திரைப்படம் வெளியாகவுள்ளது. தொடர்ந்து கார்த்தியின் விருமன் திரைப்படம் பிரின்ஸ் திரைப்படத்துடன் இணைந்து வெளியாகும் என்ற தகவல் இருக்கிறது.

மேலும், செப்டம்பர் 8 – கேப்டன், செப்டம்பர் 15 – அகிலன், செப்டம்பர் 30 – பொன்னியின் செல்வன் மற்றும் ருத்ரன் ஆகிய படங்கள் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. இதன்பின் நவம்பர் மாதம் தீபாவளி அன்று கார்த்தியின் சர்தார் வெளியாவதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். இந்த ரேசில் முந்துவது யார் என்பது குறித்து பெருத்திருந்து பார்ப்போம்..

Views: - 808

0

0