3 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகும் கனமழை : எந்ததெந்த ஊருனு தெரியுமா..?
1 August 2020, 11:11 amசென்னை : நீலகிரி உள்பட 3 மாவட்டங்களில் கனமழையும், 9 மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
அடுத்த 48 மணி நேரத்திற்கு கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி, விழுப்புரம், திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேவேளையில், நீலகிரி, சேலம், தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும். வடகடலோர மாவட்டங்கள் மற்றும மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் லேசான மழை பெய்யும்.
சூறாவளி காற்று வீசக் கூடும் என்பதால் மன்னார் வளைகுடா தென்கிழக்கு மற்றும் மத்திய அரபிக்கடல், கேரளா, கர்நாடகா, லட்சத்தீவு, மாலத்தீவு பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம், என தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 thought on “3 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகும் கனமழை : எந்ததெந்த ஊருனு தெரியுமா..?”
Comments are closed.