காவலர் திட்டியதால் மனமுடைந்த ஓட்டுநர் தீக்குளித்த கொடுமை.!!

1 July 2020, 2:46 pm
Nilgiri Driver Set Fire -Updatenews360-Recovered
Quick Share

நீலகிரி : கூடலூரில் போலீசார் திட்டியதாக கூறி லாரி ஒட்டுனர் ஒருவர் மண்ணென்ணெய் ஊற்றி தீக்குளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

நீலகிரி மாவட்டம் கூடலூர் எம் ஜி ஆர் நகர் பகுதியில் நேற்று மாலை கூடலூர் பகுதியை சேர்ந்த லாரி ஓட்டுனர் தியாகராஜா (வயது 52) என்பவர் நந்தட்டி பகுதி வழியாக கூட லுனர நோக்கி லாரியை ஒட்டி வந்துள்ளார். அப்போது லாரி ஆட்டோ ஒன்றில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

இதில் லாரி ஓட்டுநர் மற்றும் ஆட்டோ ஓட்டுனர் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் காவல் துறைக்கு தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்துக்கு வந்த எஸ்ஐ மணி துரை இது தொடர்பாக விசாரணை நடத்திய போது, ஆவணங்களை எடுக்க லாரிக்குள் ஏறிய ஒட்டுனர் தியாகராஜா திடீரென லாரியில் உள்ளே தன் மீது மண்னெண்ணெய் ஊற்றி தீ வைத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை காப்பாற்றி கூடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு முதல் உதவி சிகிச்சைக்கு பின் உடலில் 45% தீக்காயங்களுடன் மேல் சிகிச்சைக்காக கோவை மருத்துவமனைக்கு கொன்டு செல்லப்பட்டார்.

சம்பவம் குறித்து கூடலூர் டிஎஸ்பி தலைமையில் போலீசார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். கூடலூர் ஆர்டி ஒ ராஜ்குமாரும் பாதிக்கப்பட்ட ஒட்டுனரிடம் விசாரனை நடத்தியுள்ளார். தன்னை எஸ்ஐ மணிதுரை தகாத வார்த்தைகளால் தொடர்ந்து திட்டியதால் மனமுடைந்த தீ வைத்துக் கொண்டதாக ஒட்டுனர் தியாகராஜா தெரிவித்துள்ளார்.

காவல் துறையினர் லாரி ஒட்டுரை்களை தகாத வார்த்தைகளால் திட்டுவதும், தேவையற்ற அபராதம் விதிப்பதும் தொடர்ந்து வருகின்றது என்றும், இதனால் கொரோனா ஊரடங்கால் போதிய வருமானம் இல்லாமல் கஷ்டத்தில் இருக்கும் ஒட்டுனர்கள் இது போன்ற முடிவுகளுக்கு வந்து விடுவதாகவும், போலீசாரின் கெடு பிடிகளை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சம்மந்தப்பட்ட லாரி ஒட்டுனர் போதையில் விபத்து ஏற்படுத்தியதாகவும், விசாரனைக்கு சென்ற எஸ்ஐ, ஆவணங்களை காட்ட கேட்ட போது அவர் எதிர்பாராத விதமாக தீ வைத்துக் கொண்டதாகவும், தொடர் விசாரணையில் சரியான தகவல் தெரிய வரும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.