தாலிக் கட்டும் போது திருமணத்தை நிறுத்திய பெண் : திருமணம் நிறுத்த இதுதான் காரணமா? வெளியான ஆடியோ!!

2 November 2020, 1:33 pm
Ooty Marriage Stop - Updatenews360
Quick Share

நீலகிரி : திருமணத்தின் போது காதலன் காத்திருப்பதாக திருமணத்தை நிறுத்திய பெண், திருமணம் நிறுத்தப்பட்டதற்கான காரணம் குறித்து புதிய ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நீலகிரி மாவட்டம் தூனேரி கிராமத்தில் வசிக்கும் ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் சந்திரனின் மகள் பிரியா மற்றும் தோட்டக்கலை வேளாண்மை பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ராமராஜ் அவர்களின் மகன் ஆனந்த் ஆகியோரின் திருமணம் மட்ட கண்டி கிராமத்தில் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு கடந்த 29ஆம் தேதி நடைபெற இருந்தது.

நீலகிரியில் வசிக்கும் படுகர் சமுதாய மக்களின் பாரம்பரிய முறைப்படி வீட்டில் நடைபெற்ற திருமணத்தில் தாலி கட்டும் முன்பு மாப்பிள்ளை மூன்று முறை தன்னை திருமணம் செய்து கொள்ள சம்மதமா என அவர்களின் மொழியில் கேட்பது வழக்கம்.

இரண்டு முறை மாப்பிள்ளை அவ்வாறு கேட்டபோது மௌனமாக இருந்த பிரியா மூன்றாவது முறை மாப்பிள்ளை ஆனந்த், பிரியாவிடம் கேட்டபோது, மணப்பெண் பிரியா தனக்கு திருமணம் வேண்டாம் ஒரு மணி நேரம் காத்திருக்கவும் தன் காதலன் வருவதாக கூறியதால் திருமணத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து மாப்பிள்ளை எழுந்து சென்றவுடன் விழாக்கோலம் கொண்ட திருமணம் சோகத்தில் நின்றது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக பிரியா குறித்த பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்கள் சமூக ஊடங்களில் பரப்பப்பட்ட நிலையில், ஒரு சில தொலைக்காட்சிகளில் பிரியா காதலனுடன் ஓடி சென்றதாகவும் செய்திகள் பரவியது.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மணப்பெண் ப்ரீயா இன்று ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் :- அந்த ஆடியோவில் படுகர் மொழியில் பேசிய பிரியா, தனக்கு நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை ஆனந்த் மீது பல்வேறு தவறான தகவல்கள் வந்ததால் தனக்கு காதலன் இருப்பதாகவும் அவருடன் செல்வதாகவும் கூறி திருமணத்தை நிறுத்தியதாக கூறியுள்ளார்.

தற்போது நான் எனது பெற்றோர்களுடன் சொந்த கிராமத்தில் இருப்பதாகவும் என்னை பற்றி யாரும் விமர்சிக்கவோ, பெரிதுபடுத்தவோ வேண்டாம் என தாழ்மையுடன் கேட்டுக் கொண்டுள்ளார். ஆடியோவின் போது பெற்றோருடன் இருப்பது போன்ற படத்தையும் பிரியா வெளியிட்டுள்ளார்.

மணமகனின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்ததால் திருமணத்தை நிறுத்த வேறு வழியின்றி காதலன் இருப்பதாக பொய் கூறி நிறுத்தியதாக மணப்பெண் வெளியிட்ட ஆடியோ வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Views: - 33

0

0