ஏடிஎம் மையத்தில் புகுந்த பாம்பு : அலறியடித்து ஓடிய வாடிக்கையாளர்கள்.!!

23 May 2020, 5:08 pm
Atm Snake - Updatenews360
Quick Share

நீலகிரி : குன்னூர் சிம்ஸ்பூங்கா அருகிலுள்ள ஏடிஏம் மையத்தில் பாம்பு புகுந்ததால் பணம் எடுக்க வந்த வாடிக்கையாளர்கள் அலறி அடித்து ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்கா அருகில் சுற்றுலா பயணிகளுக்காக மூன்று ஏடிஎம் மையங்கள். உள்ளது இதில் கனரா வங்கி ஏடிஎம் ல் ஆறடி நீளமுள்ள சாரை பாம்பு மையத்திற்குள் புகுந்து மறைந்திருந்தது . ஏடிஎம் ல் பணமெடுக்க நீண்ட வரிசையில் காத்திருந்த பொதுமக்கள் ஏடிஎம் அறையில் பாம்பு இருப்பதை கண்டு அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.

இது குறித்து குன்னூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் ஏடிஎம் உள்ளே இருந்த பொருட்களை அகற்றி மறைந்திருந்த பாம்பை சுமார் அரை மணி நேரம் போராடி லாவகமாக கையில் பிடித்து வெளியே கொண்டு வந்தனர் . இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதன் பிறகு பொதுமக்கள் தைரியமாக ஏடிஎம் அறைக்கு சென்று பணத்தை எடுத்தனர். பிடித்த பாம்பை தீயணைப்பு துறையினர் அடர்ந்த வனப்பகுதிக்குள் விட்டனர். இச்சம்பவத்தால் குன்னூர் சிம்ஸ் பூங்கா பகுதியில் சிறுது நேரம் பரபரப்பு நிலவியது.