நீலகிரியில் யானை வழித்தடங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடங்களுக்கான தடை தொடரும் : உச்சநீதிமன்றம்

Author: Babu
14 October 2020, 5:10 pm
elephant - updatenews360
Quick Share

நீலகிரியில் யானைகளின் வழித்தடங்களை ஆக்கிரமித்து விடுதி, உணவகங்கள் கட்ட விதிக்கப்பட்ட தடை தொடரும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள யானை வழித்தடங்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடரப்பட்ட பொதுநல வழக்கில், நீலகிரி மாவட்டத்தில் உள்ள யானைகள் வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கடந்த 2011-ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, யானை வழித்தடங்களில் கட்டப்பட்டுள்ள விடுதிகள், வீடுகள் உள்ளிட்டவற்றை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும், இதற்கு அனுமதி கொடுத்தது யார் என்பது குறித்த விபரங்களையும் அளிக்கவும், அகற்றப்படும் கட்டிடங்களுக்கான இழப்பீட்டு தொகையை அரசு நிர்ணயிக்கக் கோரி உத்தரவிடப்பட்டிருந்தது.

ஆனால், நீதிமன்றத்தின் இந்த உத்தரவுகள் முறையாக பின்பற்றப்படவில்லை எனக் கூறி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது, யானைகளின் வழித்தடங்களை ஆக்கிரமித்து விடுதி, உணவகங்கள் கட்ட விதிக்கப்பட்ட தடை தொடரும் என உச்சநீதிமன்றம் மீண்டும் தீர்ப்பளித்தது. மேலும், இழப்பீடுகளை வழங்க கட்டிடங்களின் மதிப்புகளை நிர்ணயிக்க அமைக்கப்பட்ட குழு தொடர்ந்து செயல்படும் எனவும் உத்தரவிடப்பட்டது.

Views: - 73

0

0