தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களுக்கு பிறகு பல நடிகைகள் காணாமல் போவதற்கு ‘அட்ஜெஸ்ட்மென்ட்’ ஒரு காரணம் என்றே சினிமா விமர்சகர்கள் சிலர் கூறி வருகின்றனர். சினிமாவில் முன்னேற அதையெல்லாம் அசால்ட்டாக கடந்து செல்வதாக பயில்வான் ரங்கநாதன் உள்ளிட்ட சில பிரபலங்களே வெளிப்படையாக யூடியூபில் பல முன்னணி நடிகைகள் படுக்கைகளை பகிர்ந்தது பற்றி பேசி பரபரப்பை கிளப்பி வருகிறார்.
சில முன்னணி நடிகர்களுக்கும் முன்னணி நடிகைகளுக்கும் தொடர்பு இருப்பதாக ஏகப்பட்ட செய்திகளும், வதந்திகளும் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில், பெரிய ஹீரோ ஒருவரின் படத்தில் நடிக்க ஒரு பிரபலமான யூடியூப் சேனலில் நடித்து வரும் இளம் நடிகையுடன் அப்ரோச் செய்தது குறித்து அவரே பேட்டியில் பேசியிருப்பது அதிர்ச்சியை கிளப்பி உள்ளது.
நிறைமாத நிலவே எனும் வெப்சீரிஸ் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை சம்யுதா. ட்யூப் லைட் எனும் யூடியூப் சேனலில் இவர் நடித்துள்ள நிறைமாத நிலவே வெப்சீரிஸ் செம டிரெண்டாகி வருகிறது. இந்த நிலையில், ஒரு பேட்டியில் கூறியதாவது, சமீபத்தில் பெரிய நடிகர் ஒருவரின் படத்தில் நடிக்க தனக்கு அழைப்பு வந்ததும் ரொம்பவே சந்தோஷப்பட்டு அந்த போன் காலில் பேசினேன். அவர்கள் ஒவ்வொரு விஷயமாக கேட்க கேட்க எல்லாத்துக்கும் ஓகே என சொல்லி வந்தேன்.
பேசும்போதே, இத்தனை நாட்கள் திரையில் மரியாதையுடன் பார்த்த அந்த பிரபல நடிகர் படத்தில் நடிக்க போகிறோம் என மனதில் ரொம்பவே சந்தோஷமாக சிந்தித்துக் கொண்டு இருந்தேன். ஆனால், கடைசியில் இந்த வாய்ப்பு உங்களுக்கு கிடைக்க வேண்டுமென்றால், கொஞ்சம் அந்த நடிகருடன் ‘அட்ஜெஸ்ட்மென்ட்’ பண்ண வேண்டும் என்பதை எப்போ சொன்னாங்களோ அப்பவே எல்லாம் சுக்கு நூறாக உடைந்து போய்விட்டேன்.
அப்படி கேவலமான வேலை பண்ணித்தான் சினிமாவில் நடிக்கணும்னா வேண்டவே வேண்டாம் நான் கிடைக்கும் சின்ன சின்ன வாய்ப்புகளை பயன்படுத்தி வெப்சீரிஸ், சீரியல் என நடித்துக் கொள்கிறேன் என நிறைமாத நிலவே வெப்சீரிஸ் புகழ் நடிகை சம்யுதா பேசியிருப்பது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பி உள்ளது. ஆனால், எந்த நடிகர் என்பதை அவர் வெளியே சொல்லவில்லை. அவருடைய எக்ஸைட்மென்ட்டை பார்த்தால் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் ஒருவர் தான் என்பது மட்டும் தெரிகிறது.
இதுபோல் சம்பவங்கள் நடந்தால் தமிழ் சினிமாவே நாசமாகி விடும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.
மாஸ் காம்போ லோகேஷ் கனகராஜ்-ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகியுள்ள “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்து மாதம் 14 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
பகல்காம் தாக்குதல் எதிரொலியாக பாகிஸ்தானுடன் போரை தொடுக்க மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. இதற்காக முன்கூட்டியே போர் ஒத்திகை…
தென்னிந்தியாவின் டாப் நடிகை தமிழில் “விண்ணைத்தாண்டி வருவாயா” திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் சமந்தா. அதனை தொடர்ந்து தமிழ், தெலுங்கு…
ரொமாண்டிக் இயக்குனர் இயக்குனர் கௌதம் மேனன் என்ற பெயரை கேட்டாலே அவரது காதல் திரைப்படங்கள்தான் நமக்கு ஞாபகம் வரும். அந்தளவுக்கு…
கோவை புளியகுளம், அருகே அம்மன் குளம் பகுதியில் புதிய வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் உள்ளது. இங்கே…
நாகர்ஜூனா மகன் நாக சைதன்யா தெலுங்கு படத்தில் முன்னணி ஹீரோவாக வலம் வருகிறார். இவர் நடிகை சமந்தாவுடன் காதல் வயப்பட்டார்.…
This website uses cookies.