‘தங்க நாணயத்தில் மிதக்கும் கைலாசா’ – சொல்லி அடித்த நித்தியானந்தா…!

22 August 2020, 12:32 pm
Quick Share

விநாயகர் சதுர்த்தியான இன்று கைலாசா நாட்டிற்கான வர்த்தக நாணயங்களை வெளியிட்டுள்ளார் நித்தியானந்தா.

உள்ளூர் பேமஸ் ரியல் ஹீரோ உலக பேமஸ் ஆகிவிட்டார். “நம்ம தலைவர் நித்யானந்தாதான்” என இளைஞர்கள் கிண்டல் செய்தாலும், மனுசன் எப்படி வாழ்ந்திருக்கான்யா என பொராமை பட வைக்கும் அளவுக்கு இருப்பவர் நித்தி. தமிழகத்தின் திருவண்ணாமலை மாவட்டத்தில் அருணாச்சலம் மற்றும் லோகநாயகி தம்பதியருக்கு மகனாக பிறந்த நித்தியானந்தா 17 வயதில் வீட்டை வீட்டு வெளியேறி ஆன்மீக பேரின்பத்தில் ஆய்வுகள் நடத்தியதாக கூறப்படுகிறது. அவர் மீது பாலியல் புகார்கள், மோசடி வழக்குகள் என ஏராளம் இருந்தாலும் இதற்கெல்லாம் அசராத நித்தி, அடிக்கடி சமூக வலைதள பக்கத்தில் வந்து தன்னை விமர்சிப்பவர்களை கூலாக கிண்டல் செய்வார்.

இதேபோல், தனி நாடு வாங்கி விட்டதாக கடந்த ஆண்டு வெளியான மீம்களை பார்த்த நித்தி, மீம்ஸ் மற்றும் மீம்ஸ் கிரியேட்டர்களால் கைலாசா மிகவும் பிரபலாமாகி விட்டது. மீம்ஸ் கிரியேட்டர்கள் நல்லவர்களா? கெட்டவர்களா? என்பது எனக்கு தெரியாது. அவர்கள் சொல்லும் கைலாசா நாடு எங்கிருக்கிறது என்று சொன்னால் அங்கு சென்று ஏதாவது ஒரு பதவியை வாங்கி நிம்மதியாக செட்டிலாகி விடுவேன். இதுக்கு மேல் நான் என்னா சொன்னாலும் யாரும் நம்பமாட்டார்கள். ஆனால் மீம்ஸ் கிரியேட்டர்கள் வாங்கிய காசுக்கு மேல கூவுறாங்க“ என்று தனக்கே உரித்தான பாணியில் பேசினார்.

இதனை தொடர்ந்து, கைலாசா தொடர்பான செய்திகள் ஏராளமான வந்துகொண்டே இருந்தது அவர் எங்கு இருக்கிறார் என கண்டுபிடிக்க முடியாத வகையில் அவர் யுக்திகளை கையாண்டு இருப்பதாகவும் கூறப்பட்டது. தொடர்ந்து, அவர் கைலாசாவில் இருக்கும் ஏராளமான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின. இப்படி பரபரப்பான சூழலுக்கு இடையே அமெரிக்க கண்டத்தில் உள்ள ஈக்வேடார் நாட்டின் அருகே தீவு ஒன்றை விலைக்கு வாங்கி, அதற்கு கைலாசா என பெயரிட்டுள்ளதாக அவரே வீடியோ வெளியிட்டார். மேலும் அங்கு வர விரும்பும் இந்து மதத்தை பின்பற்றுவோர் விண்ணப்பிக்க இணைய வழி வலைதளத்தையும் அறிமுகம் செய்தார். இதை பார்த்த நித்யானந்தாவின் ரசிகர்கள், அவருடன் இருகும் சிஷ்யகளை பார்த்தே “அங்கு சம்பளம் இன்றி வேலை கிடைத்தால் கூட ஒகே” என நினைத்து ஏராளமான விண்ணப்பங்களை அனுப்பி வைத்தனர்.

இந்தநிலையில், தன் நாட்டிற்கென பல்வேறு சிறப்பு கட்டமைப்புகளை உருவாக்கி வரும் நித்யானந்தா விநாயகர் சதுரத்தி அன்று கைலாசாவின் கரன்சியான தங்க நாணயங்கள் வெளியிடப்படும் என முன்னதாக அறிவித்திருந்தார். இதை பார்த்த பலரும் ஆதிர்ச்சியில் ஆழ்ந்துபோயினர். இது எப்படி சாத்தியம் என பலரும் யோதித்தனர். நித்யானந்தா உண்மையில் ஒரு மத்திய வங்கியை தொடக்கி, பணத்தை அச்சிடுவாரா என்பதை நகைப்புடன் பார்த்தாலும், அதை மறுத்துவிடவும் முடியாது.ஏனென்றால், ஒரு குறிப்பிட்ட சமுதாயம் தங்களுக்கென்று நாணயங்களை அச்சிட முடியும். அத்தகைய நாணயங்களை வடிவமைக்கவும், அச்சிடவும் உதவ ஒரு வலைத்தளம்கூட உள்ளது.

சொன்னது போலவே விநாயகர் சதுர்த்தியான இன்று கைலாசா நாட்டின் வர்த்தக நாணயங்களை நித்தியானந்தா வெளியிட்டுள்ளார். முழுக்க முழுக்க தங்கத்தால் ஆன இந்த நாணயங்கள், உலகம் முழுவதும் 56 இந்து நாடுகளுடன் வர்த்தகம் செய்யும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது. கால் காசு முதல் 10 காசு வரையிலான தங்க நாணயங்களை வெளியிட்டுள்ள நித்தி, இவை தமிழில் பொற்காசுகள் என்றும், சமஸ்கிருதத்தில் ஸ்வர்ண முத்ரா என்றும், ஆங்கிலத்தில் டாலர் எனவும் அழைக்கப்படும் என கூறியுள்ளார்.

தனது தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் ஒரு நாட்டின் உள்ளூர் சட்டங்களைப் பயன்படுத்தி தனது சமூகத்தின் உறுப்பினர்களால் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்ட தனது சொந்த நாணயத்தை அவர் அச்சிடுள்ளார். ஆனால், அது சட்டப்பூர்வ ஒப்பந்தத்தின் கீழ் இயங்காது என்பதும் உண்மை.

Views: - 74

0

0