தமிழகத்தை கவர் செய்ய வரும் “நிவர்“ புயல் : அதிக கனமழை எச்சரிக்கை!!

22 November 2020, 4:11 pm
Rain Announce - Updatenews360
Quick Share

தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று உருவானது. இது அடுத்த 24 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து பின்னர் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற உள்ளது.

இது புயலா மாற வாய்ப்புள்ளது என வானிலை மையம் எச்சரித்துள்ளது. மேலும் வரும் 25ம் தேதி இது தமிழகத்தை தாக்கும் என்றும் தெற்கு வங்ககடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த பகுதி 2 நாட்களில் வலுப்பெற்று தாழ்வு மண்டலமாக மாறுகிறது எனவும் அறிவித்துள்ளது.

புயடல மாமல்லபுரம் – காரைக்கால் இடையே குறைந்த பலத்துடன் கரையை கடக்கிறது. அப்போது 50 கி,மீ முதல் 75 கி.மீ வரை காற்று வேகமாக வீசக்கூடும என்றும், கடல் பகுதியில் 62 கிமீ வேகத்தில் சூறாவளி வீசும் என கணிக்கப்பட்டுள்ளது.

இதனால் வரும் 25ஆம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் வானிலை மையம் கேட்டுக்கொண்டுள்ளது. இந்த புயல் காரணமாக, 23-ம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால் ஆகிய பகுதிகளில் கனமழை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் 24ம் தேதி புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், காரைக்கால், நாகை, கடலூர், அரியலூர், பெரம்பலூர் பகுதிகளில் அதிக கனமழை இருக்கும்,

தேபோல, ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், புதுச்சேரி, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர் ஆகிய மாவட்டங்களிலும் கன மழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

அதே போல 25ம் தேதி டெல்டா மாவட்டங்களில் அதிக கனமழை இருக்கும் என்றும் திருச்சி, ராமநாதபுரம், நாமக்கல், ஈரோடு, தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி, சிவகங்கை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் சென்னை செங்கல்பட்டு மாவட்டத்திலும் கனமழை முதல் அதிக கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 45

0

0