கடந்த 2020ஆம் ஆண்டு நெய்வேலி என்எல்சியில் பாய்லர் பகுதி வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் 15 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் காயமடைந்தனர். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட கோதண்டம், முத்து கண்ணன் ஆகியோர் தங்களுக்கு முன்ஜாமீன் வழங்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தனர்.
இந்த வழக்கு விசாரணையின் போது, விபத்தில் பாதிக்கப்பட்டோர் தரப்பில் முன்ஜாமீன் மீது ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது. அதில், என்எல்சியில் இதுபோன்ற விபத்துக்கள் அடிக்கடி நிகழ்கின்றன.
இதனால் தொழிலாளர்கள் இழப்பு சம்பவம் நிகழ்கின்றன. இறந்தவர்கள், பாதிக்கப்பட்டவர்களுக்கு என்எல்சி தரப்பில் இருந்து உரிய இழப்பீடு, கருணை தொகை வழங்கப்படவில்லை என வாதிடப்பட்டது
இதனை அடுத்து , என்எல்சி தரப்பு வாதிடுகையில், விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படுவதாகவும், இறந்தவர்கள் குடும்பத்திற்கு வேலை வழங்கப்பட்டு வருவதாகவும், இந்த ஆட்சேபனை அரசியல் உள்நோக்கம் கொண்டது எனவும் வாதிடப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட உயர்நீதிமன்ற நீதிபதி அமர்வு, என்எல்சியில் ஓரிரு முறை விபத்து என்றால் எதோ தொழிலாளர்கள் கவனக்குறைவு என எடுத்துக்கொள்ளலாம். தொடர் விபத்து உயிரிழப்பு என்றால் அதனை எப்படி எடுத்துக்கொள்வது என கேள்வி எழுப்பப்பட்டது. மேலும் , இந்த வழக்கு விசாரணயை வரும் ஆகஸ்ட் 27ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.