செப். 3., பெட்ரோல் விலை உயர்வா? குறைவா: இன்றைய நிலவரம்!!

Author: Aarthi Sivakumar
3 September 2021, 8:52 am
Quick Share

சென்னை: தொடர்ந்து 2வது நாளாக பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது.

பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் கடைபிடித்து வருகின்றன. அதன்படி, பெட்ரோல், டீசல் விலை தினசரி நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல் விலை 100 ரூபாயை கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தொடர்ந்து உயரும் பெட்ரோல், டீசல் விலையால் வாகன ஓட்டிகள் கலக்கமடைந்துள்ளனர். இதற்கிடையில், தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பையடுத்து பெட்ரொல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், தொடர்ந்து 2வது நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.99.08க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.93.38க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Views: - 994

0

0