ஆபாச யூடியூபர் மதனுக்கு நோ excuse : 8 மாத கைக்குழந்தையால் தப்பிய கிருத்திகா!!!

Author: Udayachandran RadhaKrishnan
29 June 2021, 3:42 pm
Madhan - Updatenews360
Quick Share

யூடியூபர் பப்ஜி மதனுக்கு ஜாமீன் வழங்க மறுக்கப்பட்ட நிலையில் அவரது மனைவி கிருத்திகாவுக்கு ஜாமீன் வழங்கி சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பப்ஜி கேம் விளையாடும் போது சிறுவர், சிறுமிகளிடம் ஆபாசமாக பேசி வீடியோ பதிவிட்டு வருவதாக யூடியூபர் பப்ஜி மதன் மீது சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, பப்ஜி மதனை விசாரணைக்கு நேரில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால், மதன் விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவானார்.

இதைத்தொடர்ந்து, யூ டியூபர் பப்ஜி மதன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து மதனின் தந்தை மற்றும் மனைவியிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

இதில் மதன் நடத்திய யூடியூப் சேனலுக்கு நிர்வாகியாக மதனின் மனைவி கிருத்திகா செயல்பட்டதை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த தம்பதிக்கு 8 மாத குழந்தை உள்ளதால் வேறு வழியின்றி குழந்தையுடன் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதனிடையே தன்னை யாரும் கண்டுபிடிக்க முடியாது என சவால் விடுத்திருந்த மதன் தர்மபுரியில் கைது செய்யப்பட்டான். இதையடுத்து அவர் கடந்த 18ஆம் தேதி சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகம் கொண்டு வரப்ப்பட்டு இரவு முழுவதும் தீவிர விசாரணை நடைபெற்றது.

பின்னர் , பப்ஜி மதனை ஜூலை 3 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் பூந்தமல்லி கிளை சிறையில் அடைக்க நீதிமன்ற நீதிபதி பரமசிவம் உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து மதனை பாதுகாப்பாக பூந்தமல்லி கிளைச் சிறைக்கு போலீசார் அழைத்து சென்றனர்.

இந்த நிலையில் இன்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மதன் மற்றும் அவரது மனைவியின் ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தது. ஆபாச யூடியூபர் பப்ஜி மதனின் மனைவி கிருத்திகாவுக்கு சைதாப்பேட்டை நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. கிருத்திகாவுடன் அவரது 8 மாத குழந்தையும் சிறையில் இருந்த நிலையில் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.இதில் யூடியூபர் மதனின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Views: - 221

0

0