வெளியில சாப்பாடு இல்ல, தங்குவதற்கு இடமில்ல.. தயவு செய்து என்னை சிறைக்கே அனுப்புங்க : வாளையார் மனோஜ் மனு!!

Author: Udayachandran RadhaKrishnan
2 February 2022, 2:05 pm
Walayar Manoj - Updatenews360
Quick Share

கோவை : மீண்டும் சிறைக்கு அனுப்பக்கோரி கோடநாடு வழக்கின் 2வது குற்றஞ்சாட்டப்பட்ட நபரான வாளையார் மனோஜ் உதகை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் இரண்டாம் எதிரி மனோஜ் என்கிற வாளையார் மனோஜ், தனக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்து தன்னை மீண்டும் சிறைக்கு அனுப்பக்கோரி மாவட்ட நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்.

தனக்கு இருப்பிடமும் உணவும் கிடைக்கவில்லை என்று கூறி இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். மனு விசாரணைக்கு ஏற்கப்பட்டுள்ளது.

நாளை மீண்டும இது குறித்து விசாரணை செய்யப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. உதகையில் தங்கி திங்கட்கிழமை தோரும் கையெழுத்திட வேண்டும் என உயர் நீதிமன்றம் வாளையார் மனோஜுக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன் நிபந்தனை ஜாமின் வழங்கியது.

தனக்கு வேலை இல்லாததால் உணவு, இருப்பிடத்திற்கு பணம் இல்லாமல் திண்டாடுவதாக கடந்த விசாரணையின்போது நீதிபதியிடம் முறையிட்ட நிலையில், இன்று மனுவாக கோரிக்கை மனு தாக்கல் செய்துள்ளார்.

Views: - 695

0

0