ரயில் டிக்கெட் முன்பதிவில் இந்தி திணிப்பு இல்லை……தெற்கு ரயில்வே விளக்கம்!!!

4 October 2020, 7:13 pm
irctc booking online - updatenews360
Quick Share

ஆன்லைன் ரயில் டிக்கெட் முன்பதிவில் இந்தி திணிப்பு இல்லை என தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.

ரயில் டிக்கெட் முன்பதிவு செய்தோருக்கு இந்தியில் குறுஞ்செய்தி வருவதாக புகார் எழுந்தது. ரயில் பயணச் சீட்டு முன்பதிவு செய்தால் இந்தியில் குறுஞ்செய்தி வருவதற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். மேலும் பயணிகள் நல சங்கம் ரயில்வே துறைக்கு புகார் தெரிவித்தது.

இந்நிலையில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது, மொழியை தேர்வு செய்யும் போது, ஆங்கிலத்திற்கு பதில் இந்தி என முன்னுரிமை கொடுத்ததால் பயனாளிக்கு இந்தியில் டிக்கெட் வரும் என்று ஐஆர்சிடிசி தெரிவித்துள்ளது.

ஆன் லைன் ரெயில் டிக்கெட் முன்பதிவில் இந்தி திணிப்பு இல்லை எனவும் ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது தேர்வு மொழியை சரியாக தேர்வு செய்யுங்கள் என ஐஆர்சிடிசி விளக்கம் அளித்துள்ளது.

Views: - 53

0

0