லிவிங் டுகெதரில் வசிப்பவர்கள் கவனத்திற்கு…: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி கருத்து..!!
Author: Aarthi Sivakumar5 November 2021, 5:36 pm
சென்னை: திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்தவர்கள் தங்களுக்குள் எழும் பிரச்னைகளுக்கு குடும்பநல நீதிமன்றத்தை நாட எந்தவித சட்டப்பூர்வ உரிமையும் இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
கோவை இடையர்பாளையத்தைச் சேர்ந்த கலைச்செல்வி என்பவர், ஜோசப் பேபி என்பவரை 2013ல் திருமணம் செய்ததாகவும், 2016 முதல் ஜோசப் தனியாக வசித்து வருவதால் தங்களை சேர்த்து வைக்கக்கோரி கோவை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
ஆனால், தனக்கும் கலைச்செல்விக்கும் திருமணம் நடக்கவில்லை என்பதால் அவரது வழக்கை நிராகரிக்கக்கோரி ஜோசப் பேபியும் மனுத்தாக்கல் செய்தார். இரு மனுக்களையும் விசாரித்த கோவை நீதிமன்றம், கலைச்செல்வியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இதனை எதிர்த்து கலைச்செல்வி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல்செய்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன் மற்றும் நீதிபதி விஜயகுமார் அடங்கிய அமர்வு மீண்டும் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
மேலும், இருவரும் திருமணம் செய்துகொள்ளாமல் குடும்பம் நடத்தியுள்ளதாக குறிப்பிட்ட நீதிபதி, திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்தவர்கள், தங்களுக்குள் எழும் பிரச்னைகளுக்கு குடும்ப நல நீதிமன்றத்தை நாட எந்தவித சட்டப்பூர்வ உரிமையும் இல்லை எனவும் தீர்ப்பில் தெளிவுபடுத்தியுள்ளார்.
0
0