அதிமுக என்ற ஆலமரத்தில் யார் சென்றாலும் எந்த பாதிப்பும் இல்லை : ஓபிஎஸ் பேட்டி!!!

Author: Udayachandran RadhaKrishnan
21 March 2021, 4:39 pm
OPS -Updatenews360
Quick Share

மதுரை : அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்பது மிகப்பெரிய ஆலமரம், இதில் இருந்து யார் சென்றாலும் அதிமுகாவிற்கு எந்த பாதிப்பும் இல்லை என துணை முதலமைச்சர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

வருகிற 2021 சட்டமன்ற தேர்தலையோட்டி தேனி மாவட்டத்திலுள்ள சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து வாக்குகள் சேகரிக்கவும், பிரச்சாரம் மேற்கொள்ள உள்ள தமிழக துணைமுதல்வர் O.பன்னீர்செல்வம் சென்னையிலிருந்து சிறப்பு விமானம் மூலம் மதுரை விமானநிலையம் வந்தடைந்தார்.

ஓபிஎஸ்-ன் ஆதரவாளரும் தீவிர விசுவாசியுமான திருமங்கலம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முத்துராமலிங்கம் நேற்று இரவு திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் மதுரை விமானநிலையத்தில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த துணை முதல்வர் ஓபிஎஸ், அதிமுகவின் வெற்றி வாய்ப்பு குறித்த கேள்விக்கு, ஏற்கனவே கூறியதுதான் பிரகாசமாக இருக்கிறது என்றார்.

தர்ம யுத்தத்தின் போது உங்களுக்கு உறுதுணையாக இருந்த முன்னாள் MLA முத்துராமலிங்கம் அதிமுகவில் இருந்து விலகியதற்கு காரணம் என்ன.? அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்பது மிகப்பெரிய ஆலமரம், இதில் இருந்து யார் சென்றாலும் அதிமுகவிற்கு எந்த பாதிப்பும் இல்லை.

தேர்தலில் போட்டியிட வாய்ப்புகள் வழங்காததால் அதிமுக நிர்வாகிகள் அனைவரும் திமுக, அமமுகவுடன் இணைவது அதிமுகவின் ஓட்டு வங்கியை பாதிக்குமா.? எந்த வித பாதிப்பும் இல்லை என்று கூறி காரில் புறப்பட்டு சென்றார்.

Views: - 139

0

0