அரசுப் பணியில் சேரும் ஊழியர்களுக்கு இனி அலைச்சல் இல்லை : தமிழக அரசு வெளியிட்ட அரசாணை!!

Author: Udayachandran RadhaKrishnan
27 October 2021, 11:56 am
TN Sec -Updatenews360
Quick Share

புதிதாக அரசுப் பணியில் சேரும் ஊழியர்களுக்கு இனி சொந்த மாவட்டங்களிலேயே பயிற்சி அளிக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

புதிதாக அரசு பணியில் சேரும் அரசு பணியாளர்கள் மற்றும் பதவி உயர்வு பெறும் பணியாளர்களுக்கு பணி தொடர்பான பயிற்சியினை அந்தந்த மாவட்டங்களிலேயே வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டமன்ற பேரவை விதி எண் 110ன் கீழ் கடந்த மாதம் 7-ம் தேதி தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வெளியிட்டார்.

இதன் மூலம் பவானிசாகர் சென்று பயிற்சி பெறும் நிலை தவிர்க்கப்பட்டு, தாமதமின்றி அரசு ஊழியர்கள் உரிய காலத்தில் தங்களுக்குரிய தகுதிகாண பருவம் முடித்தல் மற்றும் பதவி உயர்வு பெறுவது உறுதி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் புதிதாக அரசுப் பணியில் சேரும் ஊழியர்களுக்கு இனி சொந்த மாவட்டங்களிலேயே பயிற்சி என தமிழ்நாடு மனிதவள மேலாண்மை (பயிற்சி-1) துறை அரசாணையை வெளியிட்டுள்ளது.

Views: - 319

0

0