பார்களை மூட உத்தரவிட முடியாது : சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!
24 August 2020, 3:46 pmசென்னை : தமிழகத்தில் பார்களை மூடுவதற்கு உத்தரவிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
கொரோனா காலத்திலும் தமிழகத்தில் செயல்பட்டு வரும் பார்களில் சட்டவிரோத செயல்கள் அதிகம் நடந்து வருவதாகவும், எனவே பார்களை மூட உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி சிலம்பரசன் என்னும் வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார்.
இந்த மனு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, மதுபானக் கடைகள், பார்களை திறப்பது, மூடுவது அனைத்தும் மாநில அரசின் கொள்கை முடிவு என்றும், அதில் தலையிட நீதிமன்றத்திற்கு உரிமை இல்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். எனவே, மதுக்கடை பார்களை மூட வேண்டும் என்பதை உரிமையாக எடுத்துக் கொள்ள முடியாது எனக் கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிடப்பட்டது.