கல் இருந்தா நாயை காணோம்… தடுப்பூசி இருந்தா டோக்கன் இல்லை..! அதிகாரிகளுடன் மக்கள் வாக்குவாதம்!!

22 June 2021, 11:03 am
Token issue - Updatenews360
Quick Share

கோவை : மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தடுப்பூசி கையிருப்பு இல்லை என கூறி தடுப்பூசி போடப்படுவதாக பொதுமக்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது.

கோவை மாநகர பகுதிகளில் இன்று 43 இடங்களில் தடுப்பூசி போடப்படுகிறது. ஒரு மையத்தில் தலா 100 தடுப்பூசி வீதம் 4 ஆயிரத்து 300 தடுப்பூசிகள் போடப்படுகிறது. தடுப்பூசி போட காலை முதல் மக்கள் வரிசையில் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், கோவை வெள்ளக்கிணறு பகுதியில் தடுப்பூசி மையத்தில் 60 டோக்கன்கள் மட்டுமே வழங்கப்பட்டதாக கூறி பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனால், அங்கு பணி அமர்த்தப்பட்ட மாநகராட்சி ஊழியர் 100 டோக்கன்கள் வழங்கப்பட்டதாக தெரிவித்ததை ஏற்க மறுத்து பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

காவல்துறையினர் வந்து சமாதானம் செய்து வைத்து அனுப்பி வைத்தனர். இதேபோல், கோவை எஸ்.ஐ.எஸ்.எச். காலனி பகுதியில் அமைக்கப்பட்ட தடுப்பூசி மையத்திலும் 30 டோக்கன்கள் மட்டுமே வழங்கப்பட்டதாக பொதுமக்கள் பிரச்னை செய்தனர்.

பெரும்பாலான மையங்களில் 70 டோக்கன்கள் மட்டுமே வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, நேற்றைய மாவட்ட கொரோனா செய்திக்குறிப்பில் தடுப்பூசி கையிருப்பு பூஜ்ஜியம் என்று பதிவிட்ட நிலையில், மாநகராட்சி பகுதிகளில் 43 இடங்களில் தடுப்பூசி போடப்படுவது குறித்து தகவல் தெரிவிக்கப்படவில்லை. அதேபோல், மாநகராட்சி சார்பிலும் தகவல் தெரிவிக்காத நிலையில், தடுப்பூசி போடுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 183

0

0