‘கட்சியில் இருந்து நீக்கினாலும் கவலையில்லை’ : கெத்து காட்டிய கு.க. செல்வம்..!

5 August 2020, 6:18 pm
MLA kk selvam -- updatenews360
Quick Share

சென்னை : தி.மு.க.வில் இருந்து தன்னை நீக்கினாலும் கவலையில்லை என்று அக்கட்சியின் அதிருப்தி எம்.எல்.ஏ., கு.க. செல்வம் தெரிவித்துள்ளார்.

ஆயிரம் விளக்கு தொகுதியின் தி.மு.க. எம்.எல்.ஏ., கு.க. செல்வம், கட்சி பதவி பெறுவது தொடர்பாக தலைமையிடம் ஏற்பட்ட அதிருப்தியால் தி.மு.க.வில் இருந்து விலக முடிவெடுத்தார். டெல்லி சென்று பா.ஜ.க. தலைவர் நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைகிறார் என்று தகவல்கள் வெளியாகின. அதன்படியே, அவரும் நட்டாவை சந்தித்து பேசினார்.

பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக மீதான குறைகளை பட்டியலிட்டார். மேலும், இந்து கடவுகளை அவதூறு செய்தவர்களையும் அவர் கண்டிக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தார்.

இதையடுத்து, ஆயிரம் விளக்கு தொகுதி திமுக எம்எல்ஏ கு.க.செல்வத்தை தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.

இந்த நிலையில், தி.நகரில் உள்ள தமிழக பா.ஜ.க. அலுவலகத்திற்கு வருகை தி.மு.க., எம்.எல்.ஏ. கு.க. செல்வம் வருகை தந்தார். அப்போது, அவர் கூறியதாவது :- நான் ஒரு எம்.எல்.ஏ., என்ற முறையில் டெல்லி சென்று நுங்கம்பாக்கம் ரயில்நிலையத்திற்கு மின்தூக்கி கேட்டேன். தி.மு.க. உட்கட்சி தேர்தலை நடத்த வேண்டும்.

தமிழ் கடவுள் முருகனை ஆபாசமாக சித்தரித்தவர்களை மீது ஸ்டாலின் கண்டிக்க வேண்டும். என்னை கட்சியை விட்டு நீக்கினாலும் கவலை இல்லை. தமிழகத்தில் வாரிசு அரசியல் மாறி குடும்ப அரசியல் நடக்கிறது, என்றார்.

இதைத் தொடர்ந்து, பேசிய வி.பி. துரைசாமி, ” கு.க. செல்வம் பா.ஜ.க.வில் இணையவில்லை. நாட்டில் காங்கிரஸின் குடும்ப கட்சியை பா.ஜ.க. எப்படி எதிர்க்கின்றதோ… அதுபோல, தி.மு.க. குடும்ப கட்சியை தமிழக பா.ஜ.க. எதிர்க்கும். தி.மு.க. அதிருப்தியாளர்களை பா.ஜ.க. வரவேற்கிறது,” எனத் தெரிவித்தார்.

Views: - 0

0

0