அரசு நிகழ்ச்சியில் குத்தாட்டம் போட்ட பார்வையாளர்களால் சலசலப்பு : போலீசாரால் விரட்டியடிப்பு!!
25 January 2021, 1:57 pmதிண்டுக்கல் : தேசிய வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் குத்தாட்டம் போட்ட பார்வையாளர்களை காவல்துறையினர் விரட்டியடித்தனர். .
தேசிய வாக்காளர் விழிப்புனர்வு நிகழ்ச்சி இன்று பல்வேறு இடங்களில் நடைப்பெற்று வருகிறது. இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் அரசு துறைகள் சார்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி கலையரங்கம் பகுதியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைப்பெற்றது.
சார் ஆட்சியர் சிவகுருபிரபாகரன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் அரசு அதிகாரிகள் , பார்வையாளர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர். பாரம்பரிய முறையில் கொட்டு , சிலம்பாட்டம் உள்ளிட்ட பல கலை நிகழ்ச்சிகள் மூலம் தேர்தல் விழிப்புணர்வு பொதுமக்களுக்கு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து ஆதிவாசி மக்கள் சார் ஆட்சியருக்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சி ஆரம்பிக்கும் நில நிமிடங்கள் முன்னர் பார்வையாளர்கள் இருவர் குத்தாட்டம் போட்டது சல சலப்பை ஏற்ப்படுத்தியது. இந்த செயல் சிலரை முகம் சுழிக்க வைத்ததால் காவல் துறையினர் அவர்களை அப்புறபடுத்தினர் .
0
0