தாமதமாகிறதா வடகிழக்கு பருவமழை: வானிலை ஆய்வு மையம் தகவல்

Author: Aarthi
6 October 2020, 8:43 am
chennai metrology - updatenews360
Quick Share

சென்னை: தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்குவதில் தாமதம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் கூறியதாவது, ஒடிசா அருகே காற்றழுத்த தாழ்வுப் பகுதி தற்போது நிலவி வருவதால், வரும் 9-ம் தேதி வடக்கு அந்தமான் கடல் பகுதி மற்றும் மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புஉள்ளது.

அடுத்த 2 நாட்களில் வட மேற்கில் வடக்கு ஆந்திரா, ஒடிசா கடலோரப் பகுதியை நோக்கி நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெற வாய்ப்புள்ளது. இதன் காரணமாக வரும் 11, 12, 13 ஆகிய தேதிகளில் 2 மாநிலங்களிலும் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது.

வடக்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலவினால் தமிழகத்தில் மழை குறைந்துவிடும். வழக்கமாக, அக்டோபர் மாதத்தில் வெப்பநிலை குறைவாகவே இருக்கும். ஆனால், தற்போது பல்வேறு இடங்களில் அதிகளவு வெப்பம் பதிவாகியுள்ளது.

Cbe Rain - Updatenews360

இதன் காரணமாக, தமிழகம் நோக்கி வடமேற்கு திசையில் இருந்து வலுவான காற்று வீசுவதாலும், வடக்கு வங்கக் கடல் பகுதியில் அடுத்தடுத்து காற்றழுத்த தாழ்வுபகுதி நிலவுவதாலும் இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை தொடங்குவது தாமதமாக வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளார்.

Views: - 47

0

0