கூடுதல் கட்டணம் வசூலித்த 14 பள்ளிகளுக்கு நோட்டீஸ் : அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி!!
17 September 2020, 2:03 pmஈரோடு : தமிழகத்தில் 14 பள்ளிகளில் முழு கல்விகட்டணம் வசூலிக்கப்பட்டதற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
தந்தை பெரியாரின் 142வது பிறந்த நாளையொட்டி ஈரோட்டில் உள்ள தந்தை பெரியார் அண்ணா நினைவகத்தில் பெரியாரின் சிலைக்கு தமிழக அரசின் சார்பில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், மாவட்ட ஆட்சியர் கதிரவன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்னர் சிறுபான்மையினர் மற்றும் வணிகம் செய்யும் ஏழை எளிய மக்கள் என 41 பேருக்கு 1 கோடியே 5 லட்சத்து 84ஆயிரம் ரூபாய் கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், 6 ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை மடிக்கணினிகள் வழங்கும் திட்டம் பொருளாதார சூழல் காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.
இரண்டாம் பருவநிலைக்காண பாடத்திற்கான பாடபுத்தகங்கள் தயாரிக்கும் நடைபெற்று வருகிறது விரைவில் வழங்கப்படும் என தெரிவித்தார்.
ஆன் லைன் வகுப்புகள் பொறுத்தவரையில் உயர்நீதிமன்ற வழிகாட்டிதல் படி மாணவர்களின் நலன் கருதி 21ம் தேதி முதல் 25வரை ஆன்லைன் வகுப்புகள் நடைபெறாது என்றும் தமிழகத்தை பொறுத்தவரையில் இருமொழிக்கொள்கை தான் என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.
தமிழகத்தில் 14 பள்ளிகளில் முழு கல்விகட்டணம் வசூலிக்கப்பட்டதற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக கூறிய அவர், பள்ளியை திறப்பது குறித்து தமிழக முதல்வர் ஏற்கனவே கூறியது போல பெற்றோர்கள் மாணவர்கள் மன நிலை மற்றும் கொரோனோவின் தாக்கத்தை கருத்தில் கொண்டு தான் முடிவு செய்யப்படும் எனவும் கூறினார்.
0
0