இனி வீட்டிலேயே கொரோனா பரிசோதனை செய்யலாம் : வந்தாச்சு ‘கிட்’!!

18 June 2021, 3:21 pm
Corona Kid - Updatenews360
Quick Share

கோவை : வீட்டிலேயே கொரோனா பரிசோதனை செய்ய வசதியாக மருந்தகங்களில் “மை லேப் கிட்” விற்பனை செய்யப்படுகிறது.

தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் படிப்படியாக குறைய துவங்கி உள்ளது. எனினும் கோவை மாவட்டத்தில் கோவை தொற்றின் தாக்கம் தினசரி ஆயிரத்திற்கும் மேல் இருந்து வருகின்றது.

கொரோனா அறிகுறி இருந்தால் ஆரம்ப சுகாதார நிலையங்கள், தொற்று முகாம்களில் உள்ள பரிசோதனை மையங்களுக்கு சென்று சளி மாதிரிகளை கொடுத்து பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். அதன் முடிவுகள் வருவதற்கு 2 முதல் 3 நாட்களாகின்றது.

தனியார் மையங்களில் பரிசோதனை மேற்கொண்டால் ஒருவருக்கு 1300 ரூபாய் வரை கட்டணமாக வசூல் செய்யப்படுகின்றது. இந்நிலையில் வீட்டிலேயே எளிதாக கொரோனா பரிசோதனை செய்து கொள்ளும் “மை லேப் கிட்” தற்போது மருந்தங்களில் விற்பனைக்கு வந்துள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்.) அங்கீகாரத்துடன் இந்த கிட் விற்பனைக்கு வந்துள்ளது. மருந்தகங்களில் 250 ரூபாய்க்கு இந்த தொற்று பரிசோதனை கிட் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

இந்த கிட் மூலம் வீட்டிலேயே பரிசோதனை செய்து கொள்ள , செயலி ஒன்றை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். இந்த கொரொனா பரிசோதனை கிட் பயன்படுத்த எளிமையாக இருப்பதுடன், விலையும் குறைவு என்பதால் வீட்டிலேயே எளிமையாக பரிசோதனை செய்து கொள்ள முடியும் எனவும், பரிசோதனை முடிவுகளை நாமே கண்டறிவதுடன் ஐ.சி.எம்.ஆர் பரிசோதனை சான்றிதழும் செல்போன் எண்ணிற்கு அனுப்படும் எனவும் இது பயன்படுத்துவதற்கு எளிதான ஒன்றாக இருப்பதாகவும் அனைத்து மருந்து கடைகளிலும் இந்த கொரொனா பரிசோதனை கிட் விற்பனைக்கு வந்திருப்பதாகவும் மருந்து விற்பனையாளர் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.

Views: - 185

0

0