கூலித்தொழிலாளிகளுக்கு NPHH ரேஷன் கார்டு : அமைச்சர் சக்கரபாணியிடம் குமரி எம்பி விஜய்வசந்த் புகார்!!

14 July 2021, 4:16 pm
Vijayavasanth Meet Minister - Updatenews360
Quick Share

கன்னியாகுமரி : வறுமை கோட்டின் கீழ் உள்ள கூலித்தொழிலாளிகள், மாற்றுத்திறனாளிககளுக்கு NPHH ரேஷன் கார்டு வழங்கப்பட்டுள்ளதை மாற்றக் கோரி அமைச்சர் சக்கரபாணியிடம் குமரி எம்பி விஜய்வசந்த் கோரிக்கை வைத்துள்ளார்.

உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்ரபாணியிடம் கன்னியாகுமரி மாவட்டம் சார்பாக சந்தித்த  கன்னியாகுமரி எம். பி விஜய்வசந்த் கோரிக்கை மனு  வழங்கினார் .

அந்த மனுவில், தமிழக முதலமைச்சர் தலைமையிலான அரசு கொரோனா கால கட்டத்தில் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வென்றது. இக்காலகட்டத்தில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூபாய் 4 ஆயிரம் மற்றும் யாரும் பசியின்றி இருக்க கூடாது என்பதற்காக 13 மளிகை பொருள் உள்ளடக்கிய நிவாரண பொருட்கள் வழங்க அறிவித்து அனைத்து ரேஷன் கடைகள் மூலம் பிரித்துக் கொடுத்து மிகவும் சிறப்பாக செயல்பட்டது.

மேலும் கொரோனா காலகட்டத்தில் அனைத்து உணவுப் பொருட்கள் ரேஷன் கடையில் அரிசி மளிகை பொருட்கள் எவ்வித தட்டுப்பாடின்றி கிடைத்திட தங்கள் தலைமையிலான துறை துரிதமாக செயல்பட்டு வழங்கியது.

தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் சரியாக  வரையறுக்கப்படாமல் மாவட்டத்தில் பல்வேறு மக்களுக்கு, அன்றாடம் கூலித்தொழில் செய்பவர்களுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் PHH, PHHA கார்டுக்கு பதில்  NPHH என்ற கார்டுகள் முந்தைய ஆட்சியில் வழங்கப்பட்டிருந்தது.

இதனால் கொரோனா காலகட்டத்தில் அன்றாடம் கூலித் தொழில் செய்பவர்களும், விவசாயிகளும், மாற்றுத்திறனாளிகளுக்கும் ஒன்றிய மற்றும் மாநில  அரசால் வழங்கப்படும் எந்த நலத்திட்டங்களும் கிடைக்கவில்லை.

தற்பொழுது தங்களது தலைமையிலான துறை ஆய்வு செய்து ஒன்றிய மற்றும் மாநில அரசுகளால் வழங்கப்படும்  அனைத்து நிவாரண பொருட்களும் அன்றாடம் கூலி வேலை செய்பவர்களுக்கும் ஏழைகளுக்கும் கிடைத்திட NPHH கார்டுகள் வழங்கப்பட்டவர்களுக்கு  PHH, PHHA கார்டுகளாக மாற்றி கொடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.

Views: - 252

0

0