மாஸ் காட்ட போகும் கமலின் விக்ரம்.. உலகம் முழுவதும் இவ்வளவு திரையரங்குகளில் வெளியாகிறதா..?

Author: Rajesh
29 May 2022, 5:57 pm
Quick Share

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் விக்ரம். அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, ஃபஹத் பாசில் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். சமீபத்தில் வெளியான இப்படத்தின் ட்ரெய்லர் பெரும் வரவேற்பைப் பெற்றது. ஜூன் 3ஆம் தேதி வெளியாக இருக்கும் விக்ரம் படம் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. படத்துக்கான ப்ரோமோஷன் பணிகளும் சூடு பிடித்துள்ளன.

இந்நிலையில் நடிகர் கமல் ஹாசனும், இயக்குநர் லோகேஷ் கனகராஜும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை அவரது இல்லத்தில் சந்தித்தனர். எதற்காக இந்த சந்திப்பு நிகழ்ந்தது என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

இந்நிலையில் விக்ரம் படத்தின் தமிழ்நாட்டு உரிமையை ரெட் ஜெயன்ட் மூவிஸ் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் விக்ரம் படம் உலக முழுவது கிட்டதட்ட 5000 தியேட்டர்களில் திரையிடப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது கேரளாவில் 400 திரையரங்குகளிலும், மும்பையில் 1500 திரையரங்குகளிலும் விக்ரம் படம் வெளியாக உள்ளது.

தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 1000 தியேட்டர்களிலும் ரிலீஸ் ஆக உள்ளது. விக்ரம் படம் வெளியாக இன்னும் ஐந்து நாட்களே உள்ள நிலையில் தற்போது படத்திற்கான புக்கிங் துவங்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்குப் பிறகு கமலின் படம் வெளியாக உள்ளதால் ரசிகர்கள் ஆர்வமாக விக்ரம் படத்தின் டிக்கெட்டுகளை வாங்கி வருகின்றனர்.

இதனால் இன்னும் ஓரிரு நாட்களிலேயே அனைத்து திரையரங்குகளிலும் முழு புக்கிங் ஆக வாய்ப்பு உள்ளது. இதனால் கமல் ரசிகர்கள் தற்போதே விக்ரம் படத்தின் வெற்றி உறுதியாகிவிட்டது என கூறி வருகின்றனர்.

Views: - 578

0

0