தடுப்பூசிகளை திருடி வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்த செவிலியர் சஸ்பெண்ட் : சுகாதாரத்துறையினர் நடவடிக்கை!!!

Author: Udayachandran RadhaKrishnan
26 July 2021, 12:11 pm
Vaccine Seized - Updatenews360
Quick Share

திண்டுக்கல் : பழனி அரசு மருத்துவமனையில் இருந்து கோவாக்சின் தடுப்பூசிகளை வீட்டில் பதுக்கி வைத்த விற்பனை செய்த செவிலியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள அய்யனார் நகரைச் சேர்ந்த 50 வயதான செவிலயர் தனலட்சுமி . இவர் கரூர் தாய் சேய் நல அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார்.

நேற்று வேடசந்தூர் வட்டார மருத்துவர் பொன்.மகேஸ்வரிக்கு வந்த ரகசிய தகவலையடுத்து சுகாதாரத் துறையினர் அனைவரும் ஒட்டன்சத்திரம் ரோட்டில் உள்ள அய்யனார் நகரில் செவிலியர் தனலட்சுமியின் வீட்டில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்பொழுது தனலட்சுமியின் வீட்டில் பதுக்கி வைத்திருந்த கோவாக்சின் மருந்து பாட்டில்களை வட்டார மருத்துவர் பொன்.மகேஸ்வரி தலைமையிலான சுகாதாரத் துறையினர் கைப்பற்றினர்.

இது குறித்து வட்டார மருத்துவர் பொன் மகேஸ்வரி மேலதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து மேற்கொண்டு விசாரணை நடத்தினர். இதில் செவிலியர் தனலட்சுமி தடுப்பூசிகளை திருடி தனது சொந்த ஊரில் பொதுமக்களுக்கு அதிக விலைக்கு விற்றது உறுதியானது.

இதையடுத்து அவரிடமிருந்து 8 குப்பிகளை கைப்பற்றிய சுகாதாரத்துறையினர் தனலட்சுமியை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளனர்.

Views: - 357

0

0