பணி நிரந்தரம் செய்ய கோரி செவிலியர்கள் போராட்டம் : நள்ளிரவில் கைது.. நடந்தது என்ன?

Author: Udayachandran RadhaKrishnan
29 September 2021, 9:25 am
Chennai Nurse Protest - Updatenews360
Quick Share

சென்னை : பணி நிரந்தரம் செய்ய கோரி தற்காலிக பணியில் நியமிக்கப்பட்ட செவிலியர்கள் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்கக வளாகத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கொரோனா பணிக்காக மருத்துவ பணிநியமன ஆணையம் மூலமாக மதிப்பெண் மற்றும் இட ஒதுக்கீடு அடிப்படையில் 2020ஆம் ஆண்டு மே மாதம் முதல் செவிலியர்கள் தற்காலிக அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டனர். மூன்று கட்டடங்களாக செவிலியர்கள் தற்காலிகமாக பணியில் சேர்க்கப்பட்டனர்.

செவிலியர்கள் போராட்டம்

முதல் மற்றும் மூன்றாம் கட்டத்தில் தற்காலிக பணி நியமன ஆணையை பெற்ற 2,750 செவிலியர்களுக்கு நிரந்தரப் பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இரண்டாம் கட்டமாக பணிநியமனம் செய்யப்பட்ட 3,485 செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை.

இதையடுத்து எம்.ஆர்.பி அடிப்படையில் சேர்க்கப்பட்ட செவிலியர்களை மாவட்ட ஆட்சியர் பொறுப்பில் மாற்றக் கூடாது. கடந்த ஒரு ஆண்டாக கொரோனா பணி செய்த எங்களைப் பணி நிரந்தரம் செய்யவேண்டும்’ உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆயிரக்கணக்காகச் செவிலியர்கள் சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

செவிலியர்கள் போராட்டத்தில் கமல்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு வந்து போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தார். மேலும், செவிலியர்களின் கோரிக்கையை அரசு நிறைவேற்றித் தரவேண்டும் என்று தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

செவிலியர்களின் போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் ஆதரவு தெரிவித்தனர். போராட்டத்தில் ஈடுபடச் செவிலியர்கள் சிலர் மயக்கமடைந்து மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் சிலர் அரசு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையும் நடத்தினர்.

இதையடுத்து நேற்று மாலை 7 மணியளவில் நான்கு ஆண் செவிலியர்கள் கைது செய்யப்பட்டனர். இதனால் வெவிலியர்களுக்கும் காவல்துறையினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் இரவு வரை தொடர்ந்த போராட்டத்தல் செவிலியர்களுடன் காவல்துறையினர் மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இதையடுத்து வரும் திங்கட்கிழமை மருத்துவத்துறை அமைச்சர், மருத்துவத்துறை செயலாளர், அதிகாரிகள் ஆகியோர் செவிலியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என எழுத்துப்பூர்வ கடிதம் வழங்கப்பட்டதையடுத்து ஆர்ப்பாட்டத்தை கைவிட்டனர்.

Views: - 207

0

0