நர்சிங் கல்லூரி மாணவி பட்டப்பகலில் வெட்டிக் கொலை.. தமிழகத்தில் தொடரும் சோகம் : சிக்கிய இளைஞர்!

Author: Udayachandran RadhaKrishnan
17 March 2023, 11:23 am
Murder - Updatenews360
Quick Share

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே ராதாபுரம் கிராமத்தை சேர்ந்த துப்புரவு பணியாளர் செல்வி என்பவரின் மகள் தரணி (வயது 19) என்பவர் இன்று காலை வீட்டின் அருகே நடந்து சென்றபோது அடையாளம் தெரியாத நபரால் வெட்டுப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டார்.

கொலை செய்யப்பட்ட நபர் சென்னையில் தனியார் கல்லூரியில் நர்சிங் முதலாம் ஆண்டு படித்து வருகிறார், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த விக்கிரவாண்டி காவல்துறையினர் இளம்பெண் உடலை கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

பின்னர் காவல்துறை விசாரணை செய்ததில் காதல் விவகாரத்தில் கொலை நடந்திருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

அதனை தொடர்ந்து எஸ்.பி ஸ்ரீநாதா உத்தரவின் பேரில் விரைந்து சென்று கொலையாளியான பக்கத்து ஊரான மதுரபக்கத்தைச் சேர்ந்த கணேசன் (வயது 25) என்பது தெரிய வந்தது.

அதனை தொடர்ந்து போலிசார் அவனை தேடி சென்றப்போது புதுவை மாநிலம் திருக்கனூர் பகுதியில் பகுதியில் பதுங்கி இருந்த கணேசனை விக்கிரவாண்டி போலிசார் கைது செய்தனர். மேலும் அவனிடமிருந்து கொலைக்கு பயன்படுத்திய கத்தியையும் பறிமுதல் செய்துள்ளனர்.

கொலை நடந்த இரண்டு மணி நேரத்தில் குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் காவல் நிலையம் அழைத்து வந்து வந்து விக்கிரவாண்டி காவல்துறையினர் விசாரணை செய்ததில் இருவரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்ததாகவும் பின்னர் ஒரு வருடமாக தரணி, இவரிடம் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார்.

இதனால் தரணி மீது ஆத்திரமடைந்த கணேசன் எப்பொழுது இவர் வீட்டுக்கு வருவார் என எதிர்பார்த்து கொலை செய்ய திட்டமிட்டு, இன்று காலை வீட்டின் அருகே பதுங்கி இருந்த கணேசன், கல்லூரி மாணவி தரணி இயற்கை உபாதை கழிப்பதற்காக சென்றபோது மறைத்து வைத்திருந்த கத்தியால் வெட்டி கொலை செய்ததும் போலீஸ் விசாரணையில் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

மேலும் ஆரம்பத்தில் இருவரும் காதலித்து வந்த நிலையில் கணேசன் கஞ்சா மதுவிற்கு அடிமையாகி பாதை மாறி போனதால் ஆரம்பத்தில் காதலித்து வந்த தரணி கடந்த ஓர் ஆண்டாக அவரிடம் பேசுவதை நிறுத்தி உள்ளார்.

இதன் காரணமாகவே இளம்ப்பெண்ணை கொலை செய்ததும் காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

கல்லூரி மாணவி தரணியின் தாயார் செல்வி விழுப்புரம் நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு பணியாளராக பணிபுரிந்து வந்தார். இன்று காலை தான் மகளை எழுப்பி விட்டு விட்டு விழுப்புரத்திற்கு வேலைக்கு வந்துள்ளார்.

அதன் பின்னர் தான் மகள் கொலை செய்யப்பட்டது தகவல் தெரிந்து கதறி அழுதது சோகத்தை ஏற்படுத்தியது.

Views: - 505

0

0