அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கீடு; துணை முதலமைச்சர் வாழ்த்து

6 March 2021, 10:43 am
Amit_Shah_OPS_UpdateNews360
Quick Share

சென்னை: அதிமுக கூட்டணியில் 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதை தொடர்ந்து பாஜகவுக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நீண்ட இழுபறிக்கு பின்னர் அதிமுக-பாஜககூட்டணி பேச்சு வார்த்தையில் நேற்று உடன்பாடு எட்டப்பட்டது. பாஜகவுக்கு 20 சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கப்படுவதாக இரு தரப்பு தலைவர்களும் நள்ளிரவில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். கன்னியாகுமரியில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக போட்டியிடும் என்றும் உடன்படிக்கையில் கையெழுத்தாகியுள்ளது. இதுகுறித்து நள்ளிரவில் அதிமுக வெளியிட்ட அறிக்கையில், ஏப்ரல் 6ம் தேதியன்று நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜகவுக்கு 20 சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.அதேபோல் அன்று இடைத்தேர்தல் நடைபெறவுள்ள கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜகவின் வேட்பாளருக்கு அதிமுக தனது முழு ஆதரவை அளிக்கும் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அதிமுக கூட்டணியில் 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதை தொடர்ந்து பாஜகவுக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் கூறியுள்ளதாவது:- நடைபெறவுள்ள 2021 – சட்டமன்ற பொதுத்தேர்தலில், அஇஅதிமுக தலைமையிலான வெற்றிக் கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சிக்கு தமிழ்நாட்டில் 20 தொகுதிகள் ஒதுக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. பாரதிய ஜனதா கட்சிக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.

Views: - 10

0

0