முல்லைப் பெரியாறு அணையை கட்டிய பென்னிகுயிக்கிற்கு 181வது பிறந்த நாள் : ஓபிஎஸ் மாலை அணிவித்து மரியாதை..!!

15 January 2021, 4:30 pm
Quick Share

தேனி : கம்பம் அருகே லோயர் கேம்பில் கர்னல் பென்னிகுயிக் அவர்களின் 181வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது திருவுருவ சிலைக்கு தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தமிழகத்தில் தேனி, மதுரை, திண்டுக்கல், இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை ஆகிய ஐந்து மாவட்டங்களுக்கு நீர் ஆதாரமாக விளங்குவது முல்லைப்பெரியாறு அணையாகும். ஐந்து மாவட்டங்களுக்கும் நீர் ஆதராத்தினை கட்டிய ஆங்கிலேய இன்ஜினீயர் ஜான் பென்குக்கை, 1895 ம் வருடம் ஆங்கிலேய அரசு இவரை சென்னை மாகாணத்துக்கு பொதுப்பணித் துறைக்கு உட்பட்ட பொறியாளராக நியமிக்கப்பட்டார்.

ஆங்கிலேயர்கள் ஆண்ட நேரத்தில் வைகை அணை தற்பொழுது பாசனத்தில் உள்ள தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய பகுதியில் பெரும் வறட்சி ஏற்பட்டது. இதனைக் கருத்தில் கொண்டு, இப்பகுதி மக்களின் நீர் ஆதாரத்தை பெருக்கும் வகையில், முல்லைப்பெரியாறு அணை கட்டுவதற்கான ஏற்பாடுகளை ஆங்கிலேயர் அரசுக்கு அவர் வரைபடம் உள்ளிட்ட ஆதாரங்களை சமர்ப்பித்தார். இதனால் 75 லட்சம் செலவில் 1895 வருடம் அக்டோபர் மாதம் அப்போதைய சென்னை மாகாண கவர்னர் வென்லாக் அவர்கள் முன்னிலையில், அணை கட்டுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றன.

பின்பு சரியான முறையில் அணை கட்டிய பிறகு திடீரென மழை பெய்ததால் அணை அடித்துச் செல்லப்பட்டது. இதனை அறிந்த ஜான் பென்குக்கின் மணம் வருந்தியது. இதனால் உடனடியாக தன் சொந்த நாட்டிற்கு சென்று தன்னுடைய சொத்து அனைத்தையும் விற்று மீண்டும் அந்த அணையை கட்டுவதற்கு முயற்சி செய்து முழுமையாக கட்டி முடித்தார். இந்த முல்லை பெரியாறு அணை கட்டியதினால், தற்பொழுது தென் மாவட்டத்தில் நீர் ஆதாரம் சரியான முறையில் கிடைக்கின்றது.

5 மாவட்டங்களுக்கு நீராதாரத்தை கொடுத்த ஜான் பென்னி குக் அவர்களை பாராட்டும் வகையில், தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள லோயர் கேம்பில் அவருக்கு மணிமண்டபம் கட்டி திருவுருவச் சிலை நிறுவப்பட்டது. இதனால், இன்று 181 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தமிழகத்தின் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும், இந்த நிகழ்வில் தேனி பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத், தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ், தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்சரண் தேஜாஸ்வி, கம்பம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்டிகே ஜக்கையன், அரசுத்துறை அலுவலர்கள் விவசாய சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு ஜான் பென்குக் அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

Views: - 0

0

0