அண்ணாவின் 52வது நினைவு தினம்: துணைமுதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ட்வீட்…!!

3 February 2021, 8:58 am
ops vs anna - updatenews360
Quick Share

சென்னை: பேரறிஞர் அண்ணாவின் 52வது நினைவு தினத்தை முன்னிட்டு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ட்விட்டரில் நினைவஞ்சலி பதிவிட்டுள்ளார்.

பேரறிஞர் அண்ணாவின் 52வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படும் நிலையில், தனது நினைவஞ்சலியை பணிவோடு சமர்ப்பிப்பதாக துணைமுதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில்,

தமிழை சுவாசித்தவர்; தமிழர்களை நேசித்தவர்; ஏழையின் சிரிப்பினில் இறைவனைக் கண்டவர்; கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டை உடைமைகளாக்கி வாழ்ந்து வரலாறானவர். தமிழ்த்தாயின் தவப்புதல்வன் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் நினைவு தினத்தில், எனது நினைவஞ்சலியை பணிவோடு சமர்ப்பிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பேரறிஞர் சி.என். அண்ணாதுரை நினைவு தினத்தை ஒட்டி சின்ன காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணா நினைவு இல்லத்தில், ஊரக தொழில்துறை அமைச்சர் பெஞ்சமின், மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் உள்ளிட்ட ஏராளமானோர் அண்ணா திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதே போல தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அண்ணா சிலைக்கு பல்வேறு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

Views: - 18

0

0