ஒரே மாதத்தில் 20 லட்சம் பேர் சிறப்பு ரயிலில் பயணம்: தெற்கு ரயில்வே தகவல்…!!

5 November 2020, 3:28 pm
southern railway - updatenews360
Quick Share

அக்டோபர் மாதத்தில் மட்டும் 20 லட்சம் பேர் சிறப்பு ரெயிலில் பயணம் செய்துள்ளதாக தெற்கு ரெயில்வே தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை: கொரோனா வைரஸ் பரவலால் நாடு முழுவதும் பயணிகள் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் பொது மக்களின் கோரிக்கையை ஏற்று சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டது.

தமிழகத்தில் கடந்த ஜூன் மாதம் முதல் தெற்கு ரயில்வே சார்பில் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது பண்டிகை காலம் என்பதால், கூடுதலாக சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது. அந்த வகையில் தற்போது வரை 76 கொரோனா சிறப்பு ரெயில்களும், 27 பண்டிகை கால சிறப்பு ரெயில்களும் என 103 சிறப்பு ரெயில்கள் தெற்கு ரெயில்வே சார்பில் இயக்கப்பட்டு வருகிறது.

ஆரம்பத்தில் குறைந்த அளவிலான பயணிகள் ரயிலில் பயணித்தாலும், தற்போது அதிகளவில் பயணிகள் ரயில்களில் பயணிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் கொரோனா சிறப்பு ரயில்களில் 19 லட்சத்து 56 ஆயிரம் பயணிகளும், பண்டிகை கால சிறப்பு ரயில்களில் சராசரியாக 1 லட்சத்து 10 ஆயிரம் பயணிகளும் என மொத்தம் 20 லட்சத்து 66 ஆயிரம் பயணிகள் பயணித்துள்ளதாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 22

0

0