ஒடிசா டூ திருச்சி: ரயில் மூலம் சென்னைக்கு வந்த 76 மெட்ரிக் டன் ஆக்சிஜன்

21 June 2021, 7:56 pm
Quick Share

திருச்சி: ஒடிசாவில் இருந்து 4 கண்டெய்னர்களில் 76.06 டன் மருத்துவ ஆக்சிஜன் இன்று திருச்சி குட்செட்டிற்கு வந்தடைந்தது.

தமிழகத்தில் ஆக்சிஜன் தேவைக்காக பிற மாநிலங்களில் இருந்து ஆக்சி கன் சிறப்பு ரயில்கள் மூலம் கொண்டு வரப்படுகிறது, இதற்காக இரண்டு சிறப்பு ஐஏஎஸ் அதிகாரிகள் வெளிமாநிலங்களில் முகாமிட்டு தமிழகத்திற்கு ஆக்சிஜனை அனுப்பி வருகின்றனர். இந்த நிலையில் ஒடிசா மாநிலம் ரூர்கேலாவிலிருந்து இருந்து 4 கண்டெய்னர்களில் 76.06 டன் மருத்துவ ஆக்சிஜன் இன்று மாலை திருச்சி குட்செட்டிற்கு வந்தடைந்தது. திருச்சி வந்த மருத்துவ ஆக்சிஜன் லாரிகள் மூலம் பல்வேறு மாவட்டங்களுக்கு அதிகாரிகள் உடனடியாக பிரித்து அனுப்பினர். இதுவரை பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு 5896 டன் ஆக்சிஜன் ரயில்கள் மூலம் கொண்டு வரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 96

0

0